க்ரைம்

ஸ்டான்லி மருத்துவமனை பிரேத அறையில் வீடியோ எடுத்த 3 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னையை அடுத்த எர்​ணாவூர் பகு​தியை சேர்ந்த ரவுடி ஒரு​வர் இரு தினங்​களுக்கு முன்​னர் திடீரென உயி​ரிழந்​தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்​காக ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டது.

இதுபற்றி தகவல் அறிந்த அவரது நண்​பர்​களான வியாசர்​பாடியை சேர்ந்த சதீஷ்கு​மார் (25) மற்​றும் தவெக உறுப்​பின​ரான தீனா என்ற தினேஷ்கு​மார்(30) ஆகியோர், ரவுடி​யின் சடலத்தை பார்ப்​ப​தற்​காக நேற்று முன்​தினம் அதி​காலை ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனைக்கு சென்​றனர்.

அவர்​கள் இரு​வரும் மருத்​து​வ​மனை சவக்​கிடங்கு பகு​திக்கு வியாசர்​பாடியை சேர்ந்த சங்​கருடன் சென்​றனர். அப்​போது, பிரேதப் பரிசோதனை கூடத்​தில் பணி​யில் இருந்த சீனி​வாசனிடம் ரூ.200 கொடுத்து பிணவறை​யின் சாவியை பெற்​று பிணவறை உள்ளே சென்ற 2 பேரும், அங்கு வைக்​கப்​பட்​டிருந்த சடலங்​களை செல்​போனில் வீடியோ எடுத்​துள்​ளனர்.

இந்த சம்​பவம் மருத்​து​வ​மனை பணி​யாளர்​களுக்கு தெரிய​ வந்​ததையடுத்து, மருத்​து​வ​மனை நிர்​வாகம் தரப்​பில் ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனைவளாக போலீ​ஸாரிடம் புகார் அளிக்​கப்​பட்​டது.

புகாரின்​ பேரில் போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு சென்று விசா​ரணை நடத்​தினர். அப்​போது பிணவறை​யில் வீடியோ எடுத்​த​தாக கூறப்​படும் சதீஷ்கு​மார், தினேஷ்கு​மார் சங்​கர் ஆகிய 3 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

கைது செய்​யப்​பட்ட 3 பேரை​யும் போலீ​ஸார் காவல் நிலை​யம் அழைத்​துச் சென்று விசா​ரித்​தனர். அப்​போது, சமூக வலை​தளத்​தில் ரீல்ஸ் போடு​வதற்​காக பிணவறைக்​குள் சென்று அங்​கிருந்த சடலங்​களை வீடியோ எடுத்​த​தாக அவர்​கள் போலீ​ஸாரிடம் தெரி​வித்​தனர்.

இதையடுத்​து, சவக்​கிடங்​குக்​குள் அத்​து​மீறி நுழைந்​தது உள்​ளிட்ட 3 பிரிவு​களின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டது. கைது செய்​யப்​பட்ட 3 பேரை​யும் இரவோடு இரவாக போலீ​ஸார் ஜார்ஜ் டவுன் நீதி​மன்ற நீதிபதி வீட்​டில் ஆஜர்​படுத்​தினர். அவர்​கள் 3 பேரை​யும் நீதிபதி ஜாமீனில் விடு​வித்​தார்.

பிணவறை​யின் சாவியை வெளி​யாட்​களுக்கு வழங்​கிய​தாக கூறப்​படும் சவக்​கிடங்கு பணி​யாளர் சீனி​வாசன் மீது துறை ரீதி​யான நடவடிக்கை எடுக்க பரிந்​துரை செய்​யப்​பட்​டுள்​ளது. கைதான சதீஷ்கு​மார் (25) மற்​றும் தவெக உறுப்​பின​ரான தினேஷ்கு​மார் ஆகியோர் மீது ஏற்​கெனவே குற்​ற வழக்​கு​கள்​ உள்​ள​தாக போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT