கவின்பிரசாந்த்,  கீர்த்திவாசன்,  பார்த்திபன்

 
க்ரைம்

ஆவடி | போலி ஆன்லைன் வர்த்தக விளம்பரம் மூலம் ரூ.6 கோடி கட்டணம் பெற்று ஏமாற்றிய 3 பேர் கைது

செய்திப்பிரிவு

ஆவடி: சமூக வலை​தளம் ஒன்​றில் கடந்த 2-ம் தேதி வர்த்தக நிறு​வனம் மற்​றும் வலை​தளம் ஒன்​றின் மூலம் ஆன்​லைன் வர்த்​தகம் செய்து லட்​சக்​கணக்​கில் லாபம் ஈட்​டிய​தாகக் காட்​டும் காணொலி வெளி​யானது.

இது தொடர்​பாக, ஆவடி காவல் ஆணை​யர் செந்​தில்​கு​மார் உத்​தர​வின் பேரில், ஆவடி, இணைய வழி குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை மேற்​கொண்​டனர்.

அவ்​வி​சா​ரணை​யில் தெரிய​வந்​த​தாவது: திரு​வேற்​காட்​டைச் சேர்ந்த கவின்​பிர​சாந்த் (24), கீர்த்​தி​வாசன் (24), பார்த்​திபன் (24) ஆகிய 3 பேர், பள்​ளி, கல்​லூரி படிப்​பு​களை ஒன்​றாக படித்து நண்​பர்​களானவர்​கள்.

இவர்​கள் ஆன்​லைன் வர்த்​தகம் செய்ய பயிற்சி பெற்​றுள்​ளனர். தொடர்ந்து கடந்த மூன்​றரை ஆண்​டு​களாக திரு​வேற்​காடு பகு​தி​யில் வாடகைக்கு வீடு எடுத்து ஆன்​லைன் வர்த்​தகம் செய்து வந்​துள்​ளனர்.

இவர்​கள் சமூக வலை​தளம் ஒன்​றில் அந்​நியச் செலா​வணி வர்த்​தகம், ஆன்​லைன் வர்த்​தகப் பயிற்சி வகுப்​பு​கள் தொடர்​பாக விளம்​பரங்​களைச் செய்து வந்​துள்​ளனர். இவ்​விளம்​பரங்​களை நம்பி சுமார் 1,500 பேர், தலா ரூ.40 ஆயிரம் என, சுமார் ரூ.6 கோடி கட்​ட​ணம் செலுத்​தி, பயிற்​சி​யில் பங்​கேற்​றுள்​ளனர்.

இந்த 3 நண்​பர்​கள், மூன்​றரை ஆண்​டு​களில், ஒரு குழு​வுக்கு 40 முதல் 50 பேர் வரை என, 36 குழுக்​களாகப் பங்​கேற்ற 1,500 பேருக்கு ஆன்​லைன் வர்த்​தகப் பயிற்சி அளிப்​ப​தாகக் கூறி, அங்​கீகரிக்​கப்​ப​டாத வர்த்தக வலை​தளங்​களில் முதலீடு செய்​ய தூண்​டி​யுள்​ளனர்.

மேலும் அவர்​கள் லட்​சக்​கணக்​கில் லாபம் ஈட்​டியது​போல் பேசி, தங்​களின் செல்போன்​களில் லாபம் கிடைத்​த​தாகக் காட்​டும் காட்​சிகளை பதிவு செய்​துள்​ளனர்.

இக்​காட்​சிகளை சமூக வலை​தளம் மூலம்வெளி​யிட்​டு, பொது​மக்​களிடையே நம்​பிக்​கையை ஏற்​படுத்​தி, அங்​கீகரிக்​கப்​ப​டாத அந்​நியச் செலா​வணி வர்த்தக வலை தளங்​களில் முதலீடு செய்​யத் தூண்​டி, அதன் மூலம் பெரு​மள​வில் பணம் சம்​பா​திக்​கத் திட்​ட​மிட்​டுள்​ளனர் என விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.

இதையடுத்து கவின்​பிர​சாந்த், கீர்த்​தி​வாசன், பார்த்​திபன் ஆகிய 3 பேரை நேற்று முன்​தினம் ஆவடி இணைய வழி குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கைதுசெய்​து, அவர்​கள் பயன்​படுத்​திய 3 செல்​போன்​களை பறி​முதல் செய்​தனர்.

தொடர்ந்​து, கைதானவர்​களை பூந்​தமல்லி ஜே.எம்-1 நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தி, சிறை​யில் அடைத்​தனர். “அதிக லாபம் கிடைக்​கும் எனக்​கூறி வெளி​யிடப்​படும் போலி ஆன்​லைன் வர்த்தக விளம்​பரங்​களையாரும் நம்ப வேண்​டாம்.

அறி​முக மில்​லாத அல்​லது அங்​கீ​காரம் சரி​பார்க்​கப்​ப​டாத செயலிகளைப் பதி​விறக்​கம் செய்து பணம் முதலீடு செய்ய வேண்​டாம்” என ஆவடி காவல்​ ஆணை​யரகம்​ கூறியுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT