க்ரைம்

ரவுடி சகோதரி வீட்டுக்கு பதிலாக மூதாட்டி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 3 பேர் கைது

Guest Author

சென்னை: பெரியமேட்​டில் கொலைக்கு பழிக்​குப் பழி வாங்​கும் நோக்​கில் ரவுடி​யின் சகோ​தரி வீட்​டில் பெட்​ரோல் குண்டு வீச வந்த கும்​பல், தவறு​தலாக அரு​கில் இருந்த மூதாட்​டி​யின் வீட்​டில் வீசி​ய​தால் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது.

சென்னை பெரியமேடு நேவல் மருத்​து​வ​மனை சாலை 4-வது தெரு​வில் வசித்து வருபவர் கலை​வாணி (60). அவரது வீட்டின் கீழ்​தளத்​தில் சதக்​கத்​துல்லா (60) என்​பவர் தனது குடும்​பத்​தினருடன் வசித்து வருகிறார்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு இருசக்கர வாக​னத்​தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்​பல், கலை​வாணி வீட்டை நோக்கி அடுத்​தடுத்து 2 பெட்​ரோல் குண்​டு​களை வீசி​விட்டு அங்​கிருந்து தப்​பிச் சென்​றது.

அதில் ஒரு பெட்​ரோல் குண்டு வீட்​டின் வாசலில் விழுந்து வெடித்து சிதறியது. மற்​றொரு குண்​டும் தீப்​பற்றி எரிந்​தது. அதிர்ஷ்ட​வச​மாக வீட்​டுக்​குள் இருந்த யாருக்​கும் காயம் ஏற்​பட​வில்​லை.

பெரிய அசம்​பா​விதம் தவிர்க்​கப்​பட்​ட​தால் அப்​பகுதி மக்​கள் நிம்​மதி அடைந்​தனர். இதுகுறித்து கலை​வாணி அளித்த புகாரின் பேரில் பெரியமேடு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்​தினர்.

சம்பவ இடத்​தில் கிடந்த பெட்​ரோல் குண்டு​களின் சிதைவு​களை கைப்​பற்றி தடய​வியல் பரிசோதனைக்கு அனுப்​பினர். மேலும், அப்​பகு​தி​யில் பொருத்​தப்​பட்​டிருந்த கண்​காணிப்பு கேமரா பதிவு​களை​யும் கைப்​பற்றி விசா​ரணையை தீவிரப்​படுத்​தினர். போலீ​ஸாரின் முதற்​கட்ட விசா​ரணை​யில் பரபரப்​பான தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

அதன்​படி, கடந்த ஆண்டு பெரியமேடு பகு​தி​யில் டைசன் ரவுடி கும்​பலைச் சேர்ந்த பிரேம் என்​பவர், எதிர் கும்​பலைச் சேர்ந்த விஜய​நா​ராயணன் தலை​மையி​லான கும்​பலால் அரி​வாளால் வெட்​டிக் கொல்​லப்​பட்​டார். இந்த வழக்​கில் விஜய​நா​ராயணன் உள்​ளிட்ட பலர் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்த கொலைக்கு பழி​வாங்​கும் வகை​யில் டைசன் கும்​பலைச் சேர்ந்​தவர்​கள், விஜய​நா​ராயணனின் சகோ​தரி வசிக்​கும் வீட்​டின் மீது பெட்​ரோல் குண்டு வீசச் சென்​றனர். ஆனால், இரவு நேரத்​தில் வீடு ​களை சரி​யாக அடை​யாளம் காண முடி​யாத​தால், சகோ​தரி வீட்​டுக்கு பதிலாக அரு​கில் இருந்த கலை​வாணி​யின் வீட்​டின் மீது பெட்​ரோல் குண்​டு​களை வீசி​விட்டு தப்​பிச் சென்​றது தெரிய​வந்​தது.

சிசிடிவி காட்​சிகள் மற்​றும் ரகசிய தகவல்​களின் அடிப்​படை​யில் போலீ​ஸார் தீவிர தேடு​தல் வேட்டை நடத்​தினர். இதில், சம்​பவத்​தில் தொடர்​புடைய ரவுடி சங்​கர் உட்பட 3 பேரை கைது செய்​தனர். தொடர்ந்து விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

SCROLL FOR NEXT