க்ரைம்

சமூக வலைதளம் மூலம் மத்திய உள்துறை அமைச்சர், உ.பி. முதல்வருக்கு மிரட்டல்

செய்திப்பிரிவு

ஆவடி: திரு​வள்​ளூர் மாவட்​டம், பாண்​டேஸ்​வரம் பகு​தி​யில் வசித்து வருபவர் ஆவடி ஸ்டா​லின். இவர், தமிழ்​நாடு இந்து சேவா சங் மாநில தலை​வ​ராக இருந்து வரு​கிறார்.

இந்​நிலை​யில், ஆவடி ஸ்டா​லின், சமூக வலை​தளம் மூலம் தனக்​கும், மத்​திய உள்​துறை அமைச்​சர், உத்​தரபிரதேச முதல்​வருக்​கும், ஒரு​வர் கொலை மிரட்​டல் விடுத்​துள்​ள​தாக கூறி, நேற்று ஆவடி காவல் ஆணை​யரகத்​தில் புகார் மனு அளித்​தார்.

அந்த மனு​வில், “சில நாட்​களுக்கு முன் அலீம்​பாட்ஷா என்ற சமூக வலைதள முகவரி மூலம் எனக்கு குரல் பதிவு ஒன்று வந்​தது. அதில், பேசிய நபர், ‘மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்​ஷா, உத்​தரப்​பிரதேச முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் ஆகியோர் அவர்​கள் பதவியி​லிருந்து இறங்​கும்​போது என்​க​வுன்ட்​டர் செய்​யப்​படு​வர்.

உங்​களை நேரில் வந்து ஜிகாத் செய்​வேன்’ என கூறி​னார். ஆகவே,இந்த நபர் மீது காவல் ஆணை​யர் நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT