தமிழரசன்

 
க்ரைம்

கஞ்சா கடத்திய தூத்துக்குடி சிறை வார்டன் கைது

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: கஞ்சா கடத்​தலுடன் தொடர்பு வைத்​து, தொடர் கடத்​தலில் ஈடு​பட்டு வந்த சிறை வார்​டனை 2 கிலோ கஞ்சா மற்​றும் ரூ. 10 லட்​சம் பணத்​துடன் போலீ​ஸார் கைது செய்​தனர்.

திருநேல்​வேலி டவுன் - குற்​றாலம் சாலை​யில், காவல் ஆய்​வாளர் சுப்​பிரமணி​யன் தலை​மையி​லான போலீ​ஸார் நேற்று முன்தினம் வாகன சோதனை​யில் ஈடு​பட்​டனர். அப்​போது, அந்த வழி​யாக வந்த காரை சோதனை​யிட்​டதில், 2 கிலோ கஞ்சா மற்​றும் ரூ.10 லட்​சம் பணம் இருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. அவற்றை பறி​முதல் செய்​தனர்.

காரில் இருந்த 2 பேரை​யும் விசா​ரித்​த​போது, அவர்​கள் தூத்​துக்​குடி மாவட்​டம் விட்​டிலாபுரத்​தைச் சேர்ந்த தமிழரசன், முறப்​ப​நாடு நவீன் என்​பதும் அவர்கள் கஞ்​சாவை மொத்​த​மாக வாங்கி பொட்​டலங்​களாக பிரித்து விற்பதும் தெரிய​வந்​தது. தமிழரசன் தூத்​துக்​குடி பேரூரணி சிறையில் வார்​ட​னாக உள்​ளார் என்பதும் தெரிய​வந்​தது.

தமிழரசன் இதற்கு முன்பு பாளை​யங்​கோட்டை மத்​திய சிறை​யில் பணி​யாற்​றிய​போது, அவருக்கு பிரபல கஞ்சா வியா​பாரி​யான எஸ்​டேட் மணி என்​பவரின் நெருங்​கிய கூட்​டாளி​யான தினேஷ் என்​பவருடன் பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது.

தினேஷ் விடு​தலை​யான பின்​னர், அவருடன் சேர்ந்து தமிழரசன் கஞ்​சா கடத்தியது தெரிய​வந்​தது. கடந்த ஒரு மாதத்​துக்கு முன்பு மீண்​டும் தினேஷ் கைது செய்​யப்​பட்​டார். அவரிடம் நடத்​திய விசா​ரணை​யில் எஸ்​டேட் மணி​யும் கைது செய்​யப்​பட்​டு, பாளை சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார்.

அவர்​கள் கொடுத்த தகவலின் அடிப்​படை​யிலேயே நேற்று முன்​தினம் வாகன சோதனை நடந்தாக​வும், அப்​போது கஞ்சாமற்​றும் பணத்​துடன் சிறை வார்​டன் தமிழரசன் சிக்​கிய​தாக​வும் போலீஸ் வட்​டாரங்​கள் தெரி​வித்​தன. கைதான வார்​டன் தமிழரசனை சஸ்​பெண்ட் செய்​து, பாளை​யங்​கோட்டை மத்​திய சிறை கண்​காணிப்​பாளர் செந்​தாமரை கண்​ணன் உத்​தர​விட்​டுள்​ளார். தமிழரசனை காவலில் எடுத்து விசா​ரிக்க போலீ​ஸார் திட்​ட​மிட்​டுள்​ளனர்.

SCROLL FOR NEXT