க்ரைம்

ஓய்வுபெற்ற டிஎஸ்பி வீடு உட்பட 2 வீடுகளில் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: ஓய்​வு​பெற்ற டிஎஸ்பி வீடு உட்பட 2 வீடு​களில் 12 பவுன் நகைகள், ஒன்​றரை கிலோ வெள்​ளி, ரூ.35 ஆயிரம் திருடிய மர்ம நபர்​களை போலீ​ஸார் தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்.

திரு​வள்​ளூர் அருகே சின்ன ஈக்​காடு- ஸ்வேதா கார்​டன் பகுதியைச் சேர்ந்​தவர் ஜெயக்​கு​மார் (35). தனி​யார் நிதி நிறுவன ஊழிய​ரான இவர் கடந்த மாதம் 29-ம் தேதி தன் குழந்​தைக்கு சிகிச்சை அளிப்​ப​தற்​காக குடும்​பத்​தினருடன் சென்​னை, எழும்பூர் அரசு குழந்​தைகள் நல மருத்​து​வ​மனைக்கு சென்றுள்ளார். இந்​நிலை​யில் கடந்த 3-ம் தேதி ஜெயக்​கு​மார் வீட்டின் கதவு​கள் உடைக்​கப்​பட்டு இருந்​தது தெரிய​வந்​தது.

தகவலறிந்த ஜெயக்​கு​மார் தன் வீட்​டுக்கு விரைந்து வந்து பார்த்​த​போது வீட்​டின் பீரோ​வில் வைத்திருந்த 10 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரம் ரொக்கம், முக்​கால் கிலோ வெள்​ளிப் பொருட்​களை மர்ம நபர்​கள் திருடி சென்​றிருப்பது தெரிய​வந்​தது.

அதே போல், சின்ன ஈக்​காடு பகு​தி​யில் ஓய்வு பெற்ற டிஎஸ்பி ஜெயப்​பிர​காஷ், 3 ஆண்​டு​களுக்கு முன்பு உயி​ரிழந்த நிலை​யில் அவரது மனைவி வசந்தி (70) தனி​யாக வசித்து வரு​கிறார். இவர் கடந்த மாதம் 26-ம் தேதி, சென்​னை, மடிப்​பாக்​கத்​தில் உள்ள தன் மகள் வீட்​டுக்​குச் சென்​றார்.

கடந்த 3-ம் தேதி, வசந்தி வசித்து வந்த வீட்​டின் பூட்​டும் உடைக்​கப்​பட்டு இருந்​தது தெரிய வந்​துள்​ளது. இதையடுத்து நேற்று முன்​தினம் வசந்தி வீட்​டுக்கு வந்து பார்த்​த​போது, பீரோ​வில் இருந்த சுமார் முக்​கால் கிலோ எடை​யுள்ள 3 காமதேனு சிலைகள், கொலுசுகள், குங்​குமச் சிமிழ் உள்​ளிட்ட வெள்​ளிப் பொருட்​கள், 2 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் பணம் ஆகிய​வற்றை மர்ம நபர்​கள் திருடிச் சென்​றது தெரிய​வந்​தது.இவ்​விரு சம்​பவங்​கள் குறித்​து, புல்​லரம்​பாக்​கம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து விசாரணை மேற்கொண்டு, திருட்டு சம்​பவங்​களில் ஈடு​பட்ட மர்ம நபர்​களை தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT