க்ரைம்

சைபர் மோசடி கும்பலிடம் ரூ.2 கோடி பறிகொடுத்த ஆசிரியர்: ‘தீவிரவாத தடுப்பு போலீஸ்’ என ஏமாற்றியவர்களுக்கு வலை

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: தீ​விர​வாத தடுப்பு பிரிவு போலீஸ் என்று கூறி சைபர் மோசடி​யில் ஈடு​பட்ட கும்​பலிடம் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒரு​வர் தனது பணம் ரூ.1 கோடி மட்​டுமின்​றி, தனது மனைவி வங்​கிக் கணக்​கில் இருந்து ரூ.1 கோடியை​யும் அனுப்பி ஏமாந்​துள்​ளார்.

இதுகுறித்து சென்னை சைபர் க்ரைம் போலீ​ஸார் விசா​ரிக்​கின்​றனர். சென்​னை​யில் வசிக்​கும் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ஒரு​வருக்கு சமீபத்​தில் போன் அழைப்பு வந்​தது.

எதிர்​முனை​யில் பேசி​ய​வர், தீவிர​வாத தடுப்பு பிரிவு போலீஸ் அதி​காரி என தன்னை அறி​முகம் செய்து கொண்​டார். தொடர்ந்​து, “உங்​கள் வங்கி கணக்​கு​களை தீவிர​வா​தி​கள் சட்ட விரோத பணப் பரி​மாற்​றத்​துக்கு பயன்​படுத்தி உள்​ளனர்.

உங்​களிடம் அதுகுறித்து விசா​ரிக்க வேண்​டும். நீங்​கள் ஒத்​துழைக்​க​வில்லை என்​றால் கைது செய்து உங்​களது போட்​டோவை வெளி​யிடு​வோம்.

தற்​போது உங்​களை கைது செய்து வீட்​டுச் சிறை​யில் வைத்​துள்​ளோம். நீங்​கள் நிரப​ராதி என நிரூபிக்க வேண்​டும் என்​றால் நாங்​கள் கூறும், வங்​கிக் கணக்​குக்கு உங்​கள் கணக்​கில் உள்ள பணத்தை அனுப்​புங்​கள்.

நாங்​கள் சரி​பார்த்​து​விட்​டு, முறை​கேடு நடக்​க​வில்லை என்​பதை உறு​திப்​படுத்​திக் கொண்​டு, உங்​கள் பணத்தை திருப்பி அனுப்பி விடு​கிறோம்” என்று கூறி​யுள்​ளார்.

வாக்கி டாக்கி சத்​தம்

பின்​னணி​யில் வாக்கி டாக்கி சத்​தம் கேட்​ட​தால் இதையெல்​லாம் உண்மை என்று நம்​பிய ஓய்வு பெற்ற ஆசிரியர், தனது வங்​கிக் கணக்​கில் உள்ள ரூ.1 கோடிக்​கும் அதி​க​மான பணத்தை அந்த வங்​கிக் கணக்​குக்கு அனுப்​பி​யுள்​ளார்.

இதையடுத்​து, சகஜ​மாக பேசிய அந்த நபர், ஆசிரியரது மனை​வி​யின் வங்​கிக் கணக்​கிலும் சந்​தேகம் உள்​ள​தாகக் கூறி, அந்த கணக்​கில் இருந்​தும் ரூ.1 கோடிக்​கும் அதி​க​மான பணத்தை தான் கூறும் வங்​கிக் கணக்​குக்கு அனுப்​பச் சொல்​லி​யுள்​ளார்.

போனில் பேசிய நபர் மிரட்​டிய​தால் இதுபற்றி யாரிட​மும் தெரிவிக்​காத ஆசிரியர்​கள், கடைசி​யில் மொத்த பணத்​தை​யும் இழந்த பிறகு, ஏமாற்​றப்​பட்​டதை உணர்ந்​துள்​ளார்.

பின்​னர், சென்னை காவல் ஆணை​யரிடம் புகார் கொடுத்​துள்​ளார். இந்த மோசடி​யில் ஈடு​பட்ட சைபர் மோசடி கும்​பலை சென்னை மத்​திய குற்​றப்​பிரி​வில் உள்ள சைபர் க்ரைம்​ போலீ​ஸார்​ தேடி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT