க்ரைம்

பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை: கள்ளக்குறிச்சி அருகே ஆசிரியர் கைது

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: கள்​ளக்​குறிச்சி​யைச் சேர்ந்​தவர் ஜெகதீசன் (46). இவர் கச்​சி​ராய​பாளை​யம் அருகே உள்ள அரசு பள்​ளி​யில் ஆசிரிய​ராக பணி​யாற்றி வரு​கி​றார்.

இந்​நிலை​யில் இப்​பள்​ளி​யில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒரு​வர் கடந்த 7-ம் தேதிவீட்​டில் விஷம் குடித்து மயங்கி விழுந்​தார். அவரை சேலம் அரசு

மருத்​து​வக்​ கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயி​ரிழந்​தார்.

முன்னதாக அவர் சிகிச்​சை​யில் இருந்​த​போது அவரது பெற்​றோர் மாண​வி​யிடம் விசா​ரித்​த​தில், பள்​ளி​யில் வைத்து தன்னை ஆசிரியர் ஜெகதீசன் பாலியல் தொல்லை கொடுத்​த​தாக​வும், அதன் காரண​மாக விஷம் குடித்​த​தாக​வும் தெரி​வித்​துள்​ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாண​வி​யின் பெற்​றோர் அளித்த புகாரின்​பேரில் ஜெகதீசனை கச்​சி​ராய​பாளை​யம் போலீஸார் போக்சோ பிரி​வில் கைது செய்​தனர்​. இதனிடையே ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT