க்ரைம்

பத்திர பதிவுக்கு ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது

செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: ராம​நாத​புரத்​தில் பத்​திரம் பதிவு செய்ய ரூ.3 லட்​சம் வாங்​கிய சார்​ப​தி​வாளர், இடைத்​தரகர் ஆகிய இரு​வரை​யும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர்.

ராம​நாத​புரம் மாவட்​டத்தை பூர்​வீக​மாகக் கொண்ட, சென்னை குரோம்​பேட்​டை​யைச் சேர்ந்தவர் மருத்​து​வர் ஹாலிக் அலா​வுதீன். இவர் ராம​நாத​புரம் அருகே குய​வன்​குடி கிராமத்​தில் 1.98 ஏக்​கர் நிலத்தை தனது தாயார் பெயரில் பத்​திரம் பதிவு செய்ய, வெளிப்​பட்​ட​ணம் சார் பதி​வாளர் ராம​நாதனை அணுகி​ உள்​ளார்.

அப்​போது பத்​திர பதிவு செய்ய சார் பதி​வாளர் ரூ.50 லட்​சம் கேட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. அதன்​பின் ஹாலிக் அலா​வுதீன், ரூ.3 லட்​சத்தை சார் பதி​வாளரின் வங்​கிக் கணக்​கிலும், ரூ.17 லட்​சத்தை இடைத்தரகர் அயூப்​கான் என்​பவரிடம் வழங்​கி​ உள்ளார்.

மீண்​டும் நிலப்​ப​திவு செய்ய முயற்​சித்​த​போது, மீதி​யுள்ள பணத்தை கொடுத்​தால் தான் பத்​திர பதிவு செய்​யப்​படும் என சார் பதி​வாளர் கூறி​யுள்​ளார்.

இந்​நிலை​யில் மருத்​து​வர் ஹாலிக் அலா​வுதீன், ராம​நாத​புரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீ​ஸில் புகார் அளித்​தார். அதனையடுத்து போலீ​ஸார் அறி​வுரை​யின்படி, ரசாயனம் தடவிய ரூ.3 லட்​சத்தை நேற்று சார் பதி​வாளர் ராம​நாதனிடம் இடைத்தரகர் அயூப்​கான் கொடுக்​கும்​போது மறைந்​திருந்த லஞ்சஒழிப்பு போலீ​ஸார் இருவரை​யும் கையும் களவு​மாக கைது செய்​தனர்.

சார் பதி​வாளர் ராம​நாதன் பரமக்​குடியைச் சேர்ந்​தவர், இடைத்தரகர் அயூப்​கான் புது​மடத்​தைச் சேர்ந்​தவர். ஒரு நிலப்​ப​திவுக்கே ரூ.50 லட்​சம் லஞ்​சம் கேட்​கப்​பட்​டது குறித்து அதி​காரி​கள் அதிர்ச்​சி​யடைந்​தனர். இதுகுறித்து முழு​மை​யான விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

SCROLL FOR NEXT