படம்: மெட்டா ஏஐ
சென்னை: பெருங்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியான தனது தோழியின் (17) வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
மாணவியின் வீட்டில் இருந்த தங்க நகைகள் உள்ளிட்ட சில பொருட்கள் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
அவற்றை சிறுவன்தான் திருடியதாக நினைத்த மாணவி, தனது நண்பர்களுடன் அவரது வீட்டுக்குச் சென்று, டிவி, காஸ் சிலிண்டரை எடுத்துக் கொண்டு ஆட்டோவில் தப்பினார். புகாரின்பேரில், பெருங்குடி கல்லுக்
குட்டை கிஷோர் (21), தேனாம்பேட்டை பரத்குமார் (18), தட்சிணாமூர்த்தி (18) விக்னேஷ் ஆகிய 4 பேரையும் துரைப்பாக்கம் போலீஸார் கைது செய்தனர்.
மாணவி உள்ளிட்ட 2 சிறார்கள் கைது செய்யப்பட்டு சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.