மறியலில் ஈடுபட்ட இலங்கை தமிழர் முகாம்வாசிகள் (உள்படம்) கொலையான சிவகுமார்.

 
க்ரைம்

கும்மிடிப்பூண்டியில் இலங்கை தமிழர் முகாம் தலைவர் கொலை

6 பேர் கைது; 3 வீடுகள் சூறை; தீ வைப்பு; சாலை மறியல்

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: கும்​மிடிப்பூண்டி, இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாம் தலை​வர் கொலை செய்​யப்​பட்ட சம்​பவம் தொடர்​பாக 6 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். கைதானவர்​களின் 3 வீடு​கள் சூறை​யாடி தீ வைக்​கப்​பட்​டுள்​ள​தா​லும், சாலை மறியல் போராட்டத்தா​லும் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது.

திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மிடிப்​பூண்​டி, பெத்​திக்​குப்​பம் பகு​தி​யில் இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாம் உள்​ளது. இந்த முகாமின் நிர்​வாகத் தலை​வ​ராக கண்​ணன் என்​கிற சிவகு​மார் ​(42) இருந்து வந்​தார்.

          

நேற்று முன்​தினம் இரவு முகாம் பகு​தி​யில் சிவகு​மார் நடந்து சென்​ற​போது, அங்கு வந்த முகாம் வாசிகள் சிலருக்​கும், சிவகு​மாருக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. வாக்குவாதம் முற்றி சிவகு​மாரை எதிர்தரப்பினர் இரும்புக்கம்பி மற்​றும் உருட்டு கட்டைகளால் தாக்கி கொலை செய்​து​ விட்டு தப்​பினர்.

இதுகுறித்​து, தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த கும்​மிடிப்​பூண்டி சிப்​காட் போலீ​ஸார், உடலை கைப்​பற்றி பரிசோதனைக்​காக பொன்​னேரி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பினர். இந்​தக் கொலை சம்​பவத்​தால் அதிர்ச்​சி​யடைந்த முகாம்​வாசிகள், சிவகு​மாரை கொலை செய்​தவர்​களின் குடும்​பங்​கள் வசித்து வந்த 3 வீடு​களை சூறை​யாடி, தீவைத்​தனர்.

கைதான சுவேந்திரன், மகேந்திரன், புஷ்பஜோதி, தீபக், அக் ஷயா, ஆகாஷ் பிரசன்னா

இதையடுத்​து, சம்பவ கும்​மிடிப்​பூண்டி மற்​றும் சிப்​காட் தீயணைப்பு நிலை​ய வீரர்​கள் தீயை அணைத்​தனர். இதற்​கிடையே, வழக்​குப்பதிந்த கும்​மிடிப்​பூண்டி சிப்​காட் போலீ​ஸார், முகாமில் வசிக்​கும் செல்வா என்ற சுவேந்​திரன், அவரது அண்​ணன் கண்ணா என்​கிற மகேந்​திரன், மகேந்​திரன் மனைவி புஷ்பஜோ​தி, மகன் தீபக், மகள் நிஷா என்​கிற அக் ஷயா, சுவேந்​திரனின் மகன் ஆகாஷ் பிரசன்னா ஆகிய 6 பேரை கைது செய்​தனர்.

அவர்​களிடம் நடத்​தப்பட்ட முதல் கட்ட விசா​ரணை​யில் தெரியவந்​த​தாவது: சிவகு​மாருக்கும், சுவேந்​திரன் குடும்​பத்துக்கும் 10 ஆண்​டு​க்கு முன்பிருந்தே முன்பகை இருந்துள்​ளது. சமீபத்​தில் முகாம்​ மக்களுக்​கு 198 தொகுப்பு வீடு​களை தமிழக அரசு வழங்கியது.

இந்த தொகுப்பு வீட்​டை, சுவேந்​திரன் தரப்​பினருக்கு கிடைக்​க​வி​டா​மல் சிவகு​மார் செய்​ததாக தெரிகிறது. இதன்தொடர்ச்சியாகவே வாக்குவாதமும் கொலையும் நிகழந்ததாக போலீ​ஸார் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், கொலையாளிகளை நாடு கடத்தக் கோரி, முகாமைச் சேர்ந்த 400-க்​கும் மேற்​பட்​டோர் நேற்று சென்னை –கொல்​கத்தா தேசிய நெடுஞ்​சாலை​யிலும் வட்​டாட்​சி​யர் அலு​வல​கம் முன்பும் போ​ராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். எஸ்பி விவே​கானந்தா சுக்லா, பேச்சு நடத்​தி​யதன் பேரில்​போ​ராட்​டம்​ கைவிடப்​பட்​டது.

SCROLL FOR NEXT