இந்தியப் பெருங்கடலில் போதைப் பொருட்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட படகு.

 
க்ரைம்

நடுக்கடலில் சிக்கிய 255 கிலோ போதைப் பொருள்: 6 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: இந்​தி​யப் பெருங்​கடல் பகு​தி​யில் 255 கிலோ போதைப் பொருள் கடத்​திய 6 பேரை இலங்கை கடற்​படை​யினர் கைது செய்​தனர்.

இலங்​கை​யின் மேற்​குப் பகு​தி​யிலுள்ள பெரு​வேளை​யி​லிருந்து 60 கடல் மைல் தொலை​வில் இந்​தி​யப் பெருங்​கடலில் சந்​தேகத்​துக்​கிட​மாகச் சென்ற ஆழ்​கடல் மீன்​பிடிப் படகை இலங்கை கடற்​படை​யினர் கண்​டறிந்து ரோந்து கப்பல் மூலம் சுற்றி வளைத்​தனர்.

          

சோதனை​யில் படகில் 255 கிலோ போதைப்​பொருள் சிக்​கியது. மேலும் படகி​லிருந்த இலங்​கை​யைச் சேர்ந்த 6 பேரை கடற்​படை​யினர் கைது செய்​தனர்.

பறி​முதல் செய்த போதைப் பொருளும், படகும் திக்​கோ​விட்ட கடற்​படை முகா​முக்​குக் கொண்டு செல்​லப்​பட்​டது. மேலும் இந்தப் போதைப் பொருள் எங்​கிருந்து கடத்தி வரப்​பட்​டது, கடத்​தலில் தொடர்​புடையோர் குறித்து இலங்கை கடற்​படை​யினர் விசா​ரித்து வரு​கின்​றனர்.

இதுகுறித்து கடற்​படை​யின் மேற்​குப் பகுதி தளபதிரியர் அட்​மிரல் ஜகத் குமார செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இலங்கை கடற்​படை தனது கடல்​சார் கண்​காணிப்​பைத் தீவிரப்​படுத்​தி​யுள்​ளது.

இதன் விளை​வாக கடந்த ஜனவரி மாதத்​திலிருந்து தற்​போது வரை 7 முக்​கிய கடத்​தல் படகு​கள் கைப்​பற்​றப்​பட்​டுள்​ளன.

இவற்​றிருந்து இலங்கை மதிப்​பில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்​பிலான (இந்​திய மதிப்​பில் ரூ. 600 கோடி) போதைப்​பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT