சென்னை: எட்டாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சவுண்ட் இன்ஜினீயர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (27). படிப்பை முடித்துவிட்டு சவுண்ட் இன்ஜினீயர் ஆக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமியின் நட்பு கிடைத்தது. தொடர்ந்து பழகி வந்த அவர் காதலிப்பதாக சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய, அந்த சிறுமியை சுப்பிரமணி அவரது வீட்டுக்கு அழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். உடனே சிறுமி அங்கிருந்து வெளியேறி பெற்றோரிடம் இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இந்த விவகாரம் தொடர்பாக விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து புகாருக்குள்ளான சுப்பிரமணியை போலீஸார் கைது செய்தனர்.