க்ரைம்

செங்கல்பட்டு | ஊனமாஞ்சேரி காவலர் பயிற்சியகத்தில் வடமாநில சிறுவனுக்கு பாலியல் தொல்லை: டிஎஸ்பி மீது போக்சோ வழக்கு பதிவு

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: ஊன​மாஞ்​சேரி காவலர் பயிற்சி தலை​மையகத்​தில் வட மாநில சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்​த​தாக போக்சோ வழக்​கில் டிஎஸ்​பியிடம் விசா​ரணை நடந்து வரு​கிறது.

செங்​கல்​பட்டு மாவட்​டம், வண்​டலூர் அடுத்த ஊனமாஞ்​சேரி பகு​தி​யில் தமிழ்​நாடு காவல் உயர் பயிற்​சி​யகம் செயல்​பட்டு வரு​கிறது.

இங்கு பயிற்​சி அளித்து வந்த டிஎஸ்பி வசந்​தன் என்​பவர் அதே வளாகத்​தில் உள்ள உணவுக் கூடத்​தில் பணி​யாற்றி வந்த 16 வயது வட மாநில சிறு​வனுக்கு பாலியல் தொல்லை கொடுத்​த​தாக புகார் எழுந்​தது.

இது தொடர்​பாக சிறு​வனின் பெற்​றோர் கொடுத்த புகாரின் அடிப்​படை​யில், கிளாம்​பாக்​கம் போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின் கீழ் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

இந்த விவ​காரம் தொடர்​பாக தாம்​பரம் ஆணை​யரக துணை ஆணை​யர் கார்த்​தி​கேயன், குற்​றச்​சாட்​டுக்கு உள்​ளான டிஎஸ்​பி​யிடம் விசா​ரணை நடத்தி வரு​கிறார்.

மேலும், காவல்​துறை உயர் பயிற்​சியக வளாகத்​துக்கு உள்​ளேயே சட்​ட​வி​தி​களுக்​குப் புறம்​பாக​வும், குழந்​தைத் தொழிலா​ளர் தடுப்​புச் சட்​டங்​களுக்கு மாறாக​வும் 16 வயது சிறு​வனை வேலைக்கு அமர்த்​தி​யது யார், இதன் பின்​னணி​யில் உள்ள அதி​காரி​கள், ஒப்​பந்​த​தா​ரர்​கள் யார் என்ற பல்​வேறு கேள்வி​களும் தற்​போது எழுந்​துள்​ளன.

ஆட்​சி​யரின் உதவி​யாளர் கைது

​திரு​வள்​ளூர் மாவட்ட ஆட்​சி​யரின் நேர்​முக உதவி​யாள​ராக இருப்​பவர் பிரம்​ம​நாயகம். மதுர​வாயல் அரசு ஊழியர்​கள் குடி​யிருப்​பில் தங்கி வந்த இவர், 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்​புறுத்​தல் அளித்​த​தாகப் புகார் எழுந்​தது.

இதையடுத்​து, மதுர​வாயல் மகளிர் போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின்​கீழ் வழக்​குப் பதிவு செய்து பிரம்​ம​நாயகத்தை கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT