க்ரைம்

கோவளம் | விடுதி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: சமையலரிடம் போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

கோவளம்: கிழக்கு கடற்​கரை சாலை​யில் உள்ள கோவளம் அரசு உதவி பெறும் தனி​யார் மேல்​நிலைப் பள்​ளி​யில் முதி​யோர் காப்​பகம், குழந்​தைகள் காப்​பகம், மாண​வியர் விடுதி போன்​றவை செயல்​பட்டு வரு​கின்​றன.

இங்​குள்ள விடுதியில் சேலம் மாவட்​டத்​தைச் சேர்ந்த மாணவி சேர்க்​கப்​பட்​டிருந்​தார். அவரும் விடுதியில் இருந்த 20-க்​கும் மேற்​பட்ட மாணவி​களும் அதே பள்​ளி​யில் 7-ம் வகுப்பு படித்து வந்​தனர்.

          

மாண​வி​யின் தந்தை பிரிந்து சென்று விட்​ட​தால் மாண​வி​யின் தாயார் மட்​டும் மாதம் ஒரு​முறை வந்து மகளை பார்த்​துச் செல்​வது வழக்​கம்.

இந்​நிலை​யில் கடந்த 24-ம் தேதி தன்​னைப் பார்க்க தாய் வந்​த​போது விடுதியில் இருக்​கும் சமையலர் தன்​னிட​மும், சக மாணவி​களிட​மும் தவறாக நடந்து கொள்ள முயற்​சிப்​ப​தாக​வும், பாலியல் சீண்​டலில் ஈடு​படு​வ​தாக​வும் மாணவி புகார் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து மாண​வி​யின் தாயார் பள்ளி நிர்​வாகத்​திடம் கூறி​னார். அவர்​கள் நடத்​திய விசா​ரணை​யில் சமையலர் மாணவி​களிடம் தவறாக நடந்​தது உறுதி செய்​யப்​பட்​டது.

இதையடுத்து மாண​வி​யின் தாயார் நேற்று காலை கேளம்​பாக்​கம் போலீ​ஸில் புகார் அளித்​தார். கேளம்​பாக்​கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்​வாளர் கோமதி வழக்​குப் பதிவு செய்து விடுதி சமையல​ரான விழுப்​புரம் மாவட்​டம், காடு​வெட்டி பகு​தி​யைச் சேர்ந்த லட்​சுமணனை (44) போக்சோ சட்​டத்​தின் கீழ் கைது செய்து நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி சிறை​யில் அடைத்​தார்.

SCROLL FOR NEXT