க்ரைம்

​அணைக்கட்டு, திருச்சியில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: 7 சிறுவர்கள் உள்பட 11 பேர் போக்சோவில் கைது

செய்திப்பிரிவு

திருச்சி / அணைக்​கட்டு: திருச்​சி​யில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்​தரவு அளித்​த​தாக, சிறுமி​யிடம் இன்​ஸ்​டாகி​ராம் மூலம் பழகிய 7 சிறு​வர்​கள் உள்பட 9 பேரை போலீ​ஸார்கைது செய்​தனர். இதே​போல் வேலூர் மாவட்​டம் அணைக்​கட்டு அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்து கர்ப்​பம் ஆக்​கிய 2 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

திருச்சி பாலக்​கரை காவல் சரகத்​துக்கு உட்​பட்ட பகு​தி​யைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த மாதம் காணா​மல் போனார். இதுகுறித்து அவரது பெற்​றோர் அளித்த புகாரின்​பேரில், பாலக்​கரை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து சிறுமியை தேடிவந்​தனர். இந்​நிலை​யில், அந்​தச் சிறுமியை மீட்​டு, அவரது பெற்​றோரிடம் ஒப்​படைத்​த​போது, அந்​தச் சிறுமி பெற்​றோருடன் செல்ல மறுத்​தார். இதைத் தொடர்ந்​து, சிறுமியை குழந்​தைகள் காப்​பகத்​தில் போலீ​ஸார் ஒப்​படைத்​தனர்.

குழந்​தைகள் காப்​பகத்​தில் தங்​கி​யிருந்த சிறுமி, தனக்கு சிலர் பாலியல் தொந்​தரவு அளித்​த​தாக அங்​குள்​ளவர்​களிடம் கூறி​யுள்​ளார். இதுகுறித்து திருச்சி மாவட்ட குழந்​தைகள் பாது​காப்பு அலு​வலரிடம் காப்பக நிர்​வாகி​கள் புகார் தெரி​வித்​தனர். அதைத் தொடர்ந்​து, குழந்​தைகள் பாது​காப்​புக் குழு​வினர் சிறுமியை சந்​தித்து விவரத்தை கேட்​டறிந்​தனர்.

அப்​போது, தன்​னுடன் இன்​ஸ்டாகிராம் மூலம் பழகிய சிலர், தனக்கு பாலியல் தொல்லை அளித்​த​தாக சிறுமி குழுவினரிடம் தெரி​வித்​துள்​ளார். இதைத் தொடர்ந்​து, மாவட்ட குழந்​தைகள் பாது​காப்பு அலு​வலர் விரி​வான விசா​ரணை நடத்​து​மாறு அளித்த புகாரின்​பேரில், கோட்டை மகளிர் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர்.

விசா​ரணை​யில், முதலி​யாசத்​திரம் பகு​தி​யைச் சேர்ந்த கிஷோர், மோகன்​ராஜ் மற்​றும் 7 சிறு​வர்​கள் இன்​ஸ்​டாகி​ராம் மூலம் சிறுமி​யிடம் பழகி, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்​தது தெரிய​வந்​தது. இதையடுத்​து, அவர்களை கோட்டை மகளிர் போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர். சிறு​வர்​களை தஞ்​சாவூரில் உள்ள கூர்​நோக்கு இல்​லத்​தி​லும், மற்ற இருவரை திருச்சி மத்​திய சிறை​யிலும் அடைக்​கப்​பட்​டனர்.

சிறுமி கர்ப்​பம்: வேலூர் மாவட்​டம் அணைக்​கட்டு அருகே 14 வயது சிறுமி ஒரு​வர் உடல் நலம் பாதிக்​கப்​பட்​டார். வேலூர் அரசு மருத்​து​வ​மனை​யில் பரிசோ​தித்​த​தில் அவர் 4 மாதம் கர்ப்​ப​மாக இருப்​பது தெரிய​வந்​தது. இதைக் கேட்டு அதிர்ச்​சி​யடைந்த சிறுமி​யின் பெற்​றோர் இது தொடர்​பாக வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர். அதன்​பேரில், அணைக்​கட்டு பகு​தி​யைச் சேர்ந்த காதர்​ பாட்​சா, இதயத்​துல்லா ஆகியோர் சிறுமி​யிடம் தவறாக நடந்​து​கொண்​டது தெரிய​வந்​தது. இதைத்​தொடர்ந்து அவர்​களை போலீ​ஸார்​ போக்​சோ சட்​டத்​தின்​ கீழ் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT