நாகர்கோவில்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு, மடத்துவிளை வீடு பகுதியைச் சேர்ந்த ரெஜி (46) என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, ரெஜியை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றவாளி ரெஜிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 13,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சுந்தரையா தீர்ப்பளித்தார்.