க்ரைம்

இளநீர் வியாபாரி கொலை வழக்கில் 7 பேருக்கு 3 ஆயுள் தண்டனை

கரூர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

செய்திப்பிரிவு

கரூர்: கரூர் இளநீர் வியா​பாரி கொலை வழக்​கில் 7 பேருக்கு 3 ஆயுள், ஒரு​வருக்கு இரட்டை ஆயுள் தண்​டனை விதித்து கரூர் நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது. கரூர் சின்ன ஆண்​டாங்​கோ​வில் பகு​தி​யைச் சேர்ந்​த இளநீர் வியாபாரியான கிருஷ்ண​மூர்த்தி (25), கடந்த 2020 செப்​.18-ம் தேதி ஒரு கும்​பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து கரூர் நகர போலீ​ஸார் வழக்​குப்​ப​திந்து, கோகுல​ கண்​ணன், துரை​பாண்டி உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர். இதில், தலைமறை​வாக இருந்த பிரேம்​கு​மார் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்​யப்​பட்​டார்.

கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்ற இந்த வழக்​கில், நீதிபதி கே.ஹெச்​.இளவழகன் நேற்று முன்​தினம் தீர்ப்​பளித்​தார்.

அதில், கோகுல கிருஷ்ணனுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்​டனை விதித்​து ஏக காலத்​தில் அனுபவிக்க உத்​தர​விட்​டார்.

மேலும் துரை​பாண்​டி, மணி​கண்​டன், கேசவன், அரவிந்​த கு​மார், தமிழரசன், அஜித், செந்​தில் ஆகிய 7 பேருக்கு 3 பிரிவு​களின்​கீழ் தலா 3 ஆயுள் சிறைத்தண்​டனையை ஏக காலத்​தில் அனுபவிக்க உத்​தர​விட்​டார்.

மேலும், ஒவ்​வொரு குற்​றத்​துக்​கும் தலா ரூ.37,500 என தலா ரூ.1,12,500 அபராதம் விதித்து உத்​தர​விட்​டார்.

தலைமறை​வாகி சில மாதங்​களுக்கு பிறகு பிரேம்​கு​மார் கைதான​தால், அவர் மீதான வழக்கு தனி​யாக நடை​பெற்​றது. அவருக்கு நாளை தண்​டனை அறிவிக்​கப்பட உள்​ளது.

SCROLL FOR NEXT