க்ரைம்

திருவொற்றியூரில் மோதல்: பள்ளி மாணவன் கொலை

செய்திப்பிரிவு

சென்னை: திருவொற்றியூரில் மாணவர்கள் இடையிலான முன் விரோதம் காரண மாக பிளஸ் 2 மாணவர் கொலை செய்யப்பட்டார். அவர் மீது தாக்குதல் நடத்திய மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.

திரு​வொற்​றியூர் நெடுஞ்​சாலை​யில் உள்ள அரசு மேல்​நிலைப் பள்​ளி​யின் பிளஸ் 2 மாணவருக்​கும், வயதில் மூத்த பிளஸ் 1 மாணவருக்​கும் யார் சீனியர் என்​ப​தில் மோதல் இருந்​துள்​ளது.

இந்​நிலை​யில், பிளஸ் 2 மாணவர் நேற்று பள்ளிக்கு வரவில்​லை. அவரது வகுப்பு நண்​ப​ரான திரு​வொற்​றியூர் தனுஷ் (16) என்ற மாணவர் மாலை 4.15 மணி அளவில் அதே பகு​தி​யில் உள்ள அஜாக்ஸ் பேருந்து நிலை​யம் பின்​புறம் உள்ள காலி மைதானத்​தில் நின்​றிருந்​தார்.

இதை அறிந்த பிளஸ் 1 மாணவர் மற்​றும் அவரது நண்​பர்​கள் 10-க்​கும் மேற்​பட்​ட​வர்​கள் அங்கு வந்து சரமாரி​யாக தாக்​கிய​தில் மாணவர் தனுஷ் உயி​ரிழந்​தார். தகவல் கிடைத்து வந்த திரு​வொற்​றியூர் போலீ​ஸார், தாக்​குதலில் ஈடு​பட்ட மாணவர்​களை கைது செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

மூதாட்டி கொலை

தியாக​ராய நகர் குப்​பு​சாமி தெரு​வைச் சேர்ந்​தவர் ராதா (80). கணவர் கால​மாகி விட்​ட​தால், தனி​யாக வசித்து வந்​தார். இந்​நிலை​யில், வீட்​டுக்​குள் அவர் இறந்து கிடப்​ப​தாக, அவரது வீட்டு பணிப்​பெண் அம்மு (31), போலீஸுக்கு தகவல் கொடுத்​தார்.

பாண்​டிபஜார் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி​ய​தில், மூதாட்டி அணிந்​திருந்த 15 பவுன் நகைகள் திருடப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​தது. அம்​மு​விடம் தீவிர விசா​ரணை நடத்​தி​ய​தில், 2 பேருடன் சேர்ந்து தலை​யணை​யால் முகத்தை அமுக்கி மூதாட்​டியை கொன்​றதை ஒப்​புக்​கொண்​டார். அவரை கைது செய்த போலீ​ஸார், 2 கூட்​டாளி​களை தேடி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT