மதுபோதையில் காரை ஓட்டியதால் சிறுவன் உயிரிழப்பு: தொழிலதிபருக்கு விதித்த 5 ஆண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு

மதுபோதையில் காரை ஓட்டியதால் சிறுவன் உயிரிழப்பு: தொழிலதிபருக்கு விதித்த 5 ஆண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
Updated on
1 min read

சென்னை: மது​போதை​யில் காரை ஓட்​டிய​தால் சிறு​வன் பலி​யான சம்​பவத்​தில் தொழில​திபருக்கு விதிக்​கப்​பட்ட 5 ஆண்டு சிறை தண்​டனையை நிறுத்தி வைத்​துள்ள உயர் நீதி​மன்​றம், அவரை ஜாமீனில் விடு​வித்​தும் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை எழும்​பூர் மகப்​பேறு மருத்​து​வ​மனை அருகே கடந்த 2013 மே 22-ம் தேதி மது​போதை​யில் காரை ஓட்​டிச் சென்​ற​தில் நடை​பாதை​யில் தூங்​கிக்​கொண்​டிருந்த 12 வயது சிறு​வன் உயி​ரிழந்​தார். 4 பேர் காயமடைந்​தனர். மது​போதை​யில் காரை ஓட்​டிய​தாக தனி​யார் மது​பான ஆலை​யின் நிர்​வாகி​யான தொழில​திபர் ஷாஜி புருஷோத்​தமன் மீது போலீ​ஸார் வழக்குப் பதிவு செய்​தனர்.

இந்த வழக்கை விசா​ரித்த சென்னை 7-வது கூடு​தல் அமர்வு நீதி​மன்​றம், குற்​றம்​சாட்​டப்​பட்ட ஷாஜி புருஷோத்​த மனுக்கு 5 ஆண்​டு​கள் கடுங்​காவல் சிறை தண்​டனை மற்​றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்​பளித்​தது. அதையடுத்து ஷாஜி புருஷோத்​தமன் புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

இந்​நிலை​யில், தண்​டனையை நிறுத்​திவைக்கக் கோரியும், தனக்கு ஜாமீன் கோரி​யும் ஷாஜி புருஷோத்​தமன் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த மேல்​முறை​யீட்டு வழக்கு நீதிபதி எம்​.நிர்​மல்​கு​மார் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது.

வழக்கை விசா​ரித்த நீதிப​தி, தொழில​திபர் ஷாஜி புருஷோத்​தமனுக்கு விதிக்​கப்​பட்ட 5 ஆண்டு சிறை தண்​டனையை நிறுத்தி வைத்​தும், சிறை​யில் உள்ள அவருக்கு நிபந்​தனை ஜாமீன் வழங்​கி​யும் உத்​தர​விட்​டார்.

மேலும், ரூ.10 ஆயிரத்​துக்கு சொந்த ஜாமீன் மற்​றும் அதே தொகைக்கு இருநபர் ஜாமீன் உத்​தர​வாதம் அளிக்க வேண்​டும் என்​றும், செப்​டம்​பர் 1-ம் தேதி நீதி​மன்​றத்​தில் ஆஜராக வேண்டும்.

பி்ன்​னர் 3 மாதங்​களுக்கு ஒரு​முறை நீதி​மன்​றத்​தில் ஆஜராக வேண்​டும் எனவும், இதற்​காக விசா​ரணை நீதி​மன்​றம் விதிக்​கும் நிபந்​தனை​களை ஏற்றுக் கொள்ள வேண்​டும் என்​றும் நிபந்​தனை​களை மீறி​னால் விசா​ரணை நீதி​மன்​றம் தகுந்த உத்​தரவு பிறப்​பிக்​கலாம்​ எனவும் உத்​தர​வி்ட்​டுள்​ளார்​.

மதுபோதையில் காரை ஓட்டியதால் சிறுவன் உயிரிழப்பு: தொழிலதிபருக்கு விதித்த 5 ஆண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
சுதந்திர தினத்தையொட்டி 15 போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வரின் சிறப்பு பதக்கங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in