க்ரைம்

ரஜினியின் ‘தர்மன்' படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக நூதன மோசடி: கமல்ஹாசனின் உதவியாளர் புகாரில் வழக்குப்பதிவு

செய்திப்பிரிவு

சென்னை: ரஜினி​யின் ‘தர்​மன்’ திரைப்​படத்​தில் நடிக்க வாய்ப்பு தரு​வ​தாக கூறி நூதன மோசடி​யில் சிலர் ஈடு​படு​வ​தாக கமல்​ஹாசனின் உதவி​யாளர் போலீ​ஸில் புகார் அளித்​துள்​ளார்.

நடிகர் கமல்​ஹாசனின் உதவி​யாளர் முரளி, சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் மனு ஒன்​றினை அளித்​திருந்​தார். அதில், ‘தர்​மன்’ படத்​தின் பெயரைப் பயன்​படுத்தி சில மர்ம நபர்​கள் அப்​பாவி இளைஞர்​களை ஏமாற்றி வருகின்றனர்.

தாய்​லாந்​தில் நடை​பெற உள்ள ‘தர்​மன்’ படப்​பிடிப்​பில் கலந்​து​ கொண்டு நடிக்க, ‘நடிகர் அட்​டை’ பெற வேண்​டும் எனக் கூறி, அதற்​காக ரூ. 12,500-ஐ முன்​பண​மாகக் கேட்​டுப் பெற்​றுள்​ளனர். இந்த வாய்ப்​பைப் பெறு​பவர்​களுக்கு ரூ.18.50 லட்​சம் வரை சம்​பளம் கிடைக்​கும் எனப் பொய்​யான வாக்​குறு​தி​களை வழங்கி நூதன முறை​யில் பொது​மக்​களிடம் மோசடி​யில் ஈடு​பட்டு வந்​துள்​ளனர்.

எனவே, இந்த மோசடி கும்​பல் மீது சட்​டப்​பூர்​வ​மான கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்,’ என முரளி தனது புகாரில் வலி​யுறுத்​தி​யிருந்​தார். இந்​தப் புகாரின் அடிப்​படை​யில், தற்​போது தேனாம்​பேட்டை போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​து, இணை​யத்​தில் போலி விளம்​பரங்​கள் மூலம் மோசடி​யில் ஈடு​பட்ட மர்ம நபர்​களை வலை​வீசித்​ தேடி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT