க்ரைம்

சவுக்கு மீடியா சிஇஓ ‘சவுக்கு’ சங்கர் கைது - பின்னணி என்ன?

பார் உரிமையாளரை மிரட்டி ரூ.94,000 வாங்கியதாக புகார்

செய்திப்பிரிவு

பார் உரிமையாளரை மிரட்டி ரூ.94 ஆயிரம் வாங்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் சவுக்கு மீடியா சிஇஓ'சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்தனர்.

சவுக்கு மீடியா நெட்வொர்க் என்ற பெயரில் யூடியூப் சேனலை 'சவுக்கு' சங்கர் நடத்தி வருகிறார். அதன் சிஇஓ-வாகவும் அவர் உள்ளார். திமுக அரசு மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் குறித்து அவ்வப்போது தனது யூடியூப் சேனலில் சங்கர் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். இதனால். அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சிறை சென்ற அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அதன்பிறகும் பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து வீடியோ வெளியிட்டதால், அவர் மீது காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி வந்தன. இந்நிலையில், சவுக்கு சங்கரை கைது செய்ய, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸார் நேற்று காலை வந்தனர்.

போலீஸ் வருவதை அறிந்த சவுக்கு சங்கர். வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். போலீஸார் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. வெளியே இருந்தபடி, கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்குமாறும், இல்லையென்றால். கதவை உடைத்து உள்ளே வருவோம் எனவும் போலீஸார் எச்சரித்தனர். அந்த நேரத்தில் வீட்டுக்குள் இருந்த சவுக்கு சங்கர் தன்னை கைது செய்ய போலீஸார் வந்திருப்பதாக வீடியோ ஒன்றை சமூக வலை தளத்தில் வெளியிட்டார்.

இதையடுத்து, தீயணைப்புத் துறை உதவியுடன் போலீஸார் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று சவுக்கு சங்கரை கைது செய்தனர்.

சவுக்கு சங்கர் கூறும்போது, 'தனது யூடியூப் சேனலில் வேலை பார்க்கும் ஒருவரின் ஜிபே-க்கு ரூ.94,000 பணம் வந்திருந்தது. அதுபற்றி விசாரித்துக் கொண்டிருந்தேன். நான் மிரட்டி ஊழியர் மூலமாக ரூ.94,000 வாங்கிய தாக ஒருவரிடம் போலீஸார் புகார் பெற்றுள்ளனர். இதுபோல் ஜிபே-யில் பணம் அனுப்பி கைது செய்ய முடி யும் என்பதை போலீஸார் செய்துள்ளனர்" என்றார்.

இதையடுத்து. கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 26-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து. அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை நந்தனத்தில் உள்ள பார் உரிமையாளர் ஹரிசந்திரன், தன்னை மிரட்டி ரூ.94,000 வாங் கியதாக அளித்த புகாரில் சைதாப் பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து சவுக்கு சங்கரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT