க்ரைம்

ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மில் ரூ.9 லட்சம் கொள்ளை: இயந்திரத்தை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்துள்ளனர்

செய்திப்பிரிவு

தாம்​பரம்: ஐசிஐசிஐ வங்​கி ஏடிஎம் இயந்​திரத்தை கேஸ் வெல்​டிங் மூலம் உடைத்​து, சுமார் ரூ.9 லட்​சம் பணத்தை மர்ம நபர்​கள் கொள்​ளை​யடித்​துச் சென்​றுள்​ளனர்.

தாம்​பரம் அருகே சோமங்​கலம் காவல் நிலை​யத்​துக்கு உட்​பட்ட புதுப்​பேர் கிராமம், ஸ்ரீபெரும்​புதூர் மெயின் ரோட்​டில் ஐசிஐசிஐ வங்​கி​யின் ஏடிஎம் மையம் உள்​ளது. நேற்று முன்​தினம் அதி​காலை 3.30 மணி​யள​வில் மர்ம நபர்​கள் ஏடிஎம் மையத்​துக்​குள் புகுந்​துள்​ளனர்.

பின்​னர் கேஸ் வெல்​டிங் கரு​வியை பயன்​படுத்தி ஏடிஎம் இயந்​திரத்தை உடைத்​து, அதிலிருந்த பணத்தை கொள்​ளை​யடித்​து​விட்டு தப்​பிச் சென்​றுள்​ளனர்.

தகவலறிந்த சோமங்​கலம் காவல் நிலைய போலீ​ஸார் விரைந்து சென்று விசா​ரணை மேற்​கொண்​டனர். மேலும் ஏடிஎம் மையத்​தில் பொருத்​தப்​பட்​டுள்ள கண்​காணிப்பு கேம​ராக்​களில் பதி​வான காட்​சிகளை ஆய்வு செய்து வரு​கின்​றனர்.

கொள்​ளை​யர்​கள் எத்​தனை பேர் வந்​தனர், அவர்​கள் பயன்​படுத்​திய வாக​னம் எது, கொள்ளை சம்​பவத்​தின்​போது பதி​வான காட்​சிகளில் அவர்​களின் உரு​வம் தெளி​வாக உள்​ளதா என ஆய்வு நடை​பெற்று வரு​கிறது.

இதற்​கிடையே தாம்​பரம் காவல் மாவட்ட துணை ஆணை​யர் கார்த்​தி​கேயன் சம்பவ இடத்​தில் ஆய்வு செய்​தார். பின்​னர் மர்ம நபர்​களை பிடிக்க மேற்​கொள்​ளப்​பட்டு வரும் நடவடிக்​கைகள் குறித்​தும் ஆய்வு செய்​தார்.

ஐசிஐசிஐ வங்கி அதி​காரி​களிட​மும் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். ஏடிஎம் இயந்​திரத்​தில் இருந்த பணத்​தின் சரி​யான அளவு, பணம் நிரப்​பப்​பட்ட நேரம் உள்​ளிட்ட விவரங்​களை​யும் போலீ​ஸார் சேகரித்து வரு​கின்​றனர்.

கேஸ் வெல்​டிங்கை பயன்படுத்தி ஏடிஎம் இயந்​திரத்தை உடைத்து பணம் கொள்​ளை​யடித்​துள்​ள​தால், திட்​ட​மிட்டு இந்த கொள்ளை சம்​பவத்தை நடத்​தி​யிருக்​கலாம் என போலீ​ஸார் சந்​தேகிக்​கின்​றனர்.

கண்​காணிப்பு கேமரா காட்​சிகள் மற்​றும் சம்பவ இடத்​தில் கிடைத்த தடயங்​களின் அடிப்​படை​யில் கொள்​ளை​யர்​களை அடை​யாளம் கண்டு கைதுசெய்ய சோமங்​கலம் போலீ​ஸார் தீவிர நடவடிக்​கை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT