க்ரைம்

23 வழக்குகளில் தொடர்புடையவர் பிரபல ரவுடி மோகனசுந்தரம் காஞ்சிபுரத்தில் கைது: கூட்டாளிகள் 3 பேர் சென்னையில் சிக்கினர்

செய்திப்பிரிவு

சென்னை: தண்​டை​யார்​பேட்டை பகு​தியை சேர்ந்த பிரபல ரவுடி மோக​னசுந்​தரத்தை ஆர்​.கே.நகர் போலீ​ஸார் காஞ்​சிபுரத்​தில் கைது செய்​தனர். அவருடைய கூட்​டாளி​கள் 3 பேரும் சென்​னை​யில் கைது செய்​யப்​பட்​டனர். அவர்​களிட​மிருந்து ஒன்​றரை கிலோ கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டது.

சென்னை தண்​டை​யார்​பேட்டை கருணாநிதி நகரைச் சேர்ந்​தவர் மோக​னசுந்​தரம் (32). பிரபல ரவுடி​யான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்​ளிட்ட 23-க்​கும் மேற்​பட்ட குற்ற வழக்​கு​கள் உள்​ளன.

அவற்​றில் சில வழக்​கு​களில் அவர் விடு​தலை செய்​யப்​பட்​டுள்​ள​தாக போலீ​சார் தெரி​வித்​தனர். இந்​நிலை​யில், தலைமறை​வாக இருந்த மோக​னசுந்​தரத்தை பிடிக்க ஆர்​.கே.நகர் போலீ​ஸார் அமைத்​திருந்த தனிப்​படை​யினர் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்டு வந்​தனர்.

தொடர்ந்து மேற்​கொள்​ளப்​பட்ட ரகசிய விசா​ரணை​யில், அவர் காஞ்​சிபுரம் பகு​தி​யில் பதுங்கி இருப்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்​படை போலீ​ஸார், மோக​னசுந்​தரத்தை மடக்​கிப் பிடித்து கைது செய்​தனர்.

இதனிடையே, மோக​னசுந்​தரத்​தின் கூட்​டாளி​களான ஷாயின்ஷா (26), யூசுப் (28), பாபு (30) ஆகிய 3 பேரை​யும் சென்​னை​யில் போலீ​ஸார் கைது செய்​தனர். அவர்​களிடம் நடத்​தப்​பட்ட சோதனை​யில் ஒன்​றரை கிலோ கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டது.

பறி​முதல் செய்​யப்​பட்ட கஞ்​சாவை வைத்து அவர்​கள் மீது போதைப்​பொருள் தடுப்​புச் சட்​டத்​தின் கீழும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக போலீ​சார் தெரி​வித்​தனர்.

கைது செய்​யப்​பட்ட மோக​ன சுந்​தரம் மற்​றும் அவரது 3 கூட்​டாளி​களிட​மும் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். அவர்​கள் வேறு குற்​றச் செயல்​களில் தொடர்​புடைய​வர்​களா? தலைமறை​வாக இருந்த காலத்​தில் யாரிடம் அடைக்​கலம் புகுந்​தனர்? கஞ்சா கடத்​தல் மற்​றும் விற்​பனை வலை​யமைப்​பில் தொடர்பு உள்​ள​தா? என்​பது குறித்​தும் விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

கைது செய்​யப்​பட்ட 4 பேரும் ஜார்ஜ் டவுன் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டனர். வழக்கை விசா​ரித்த நீதிப​தி, 4 பேரை​யும் வரு​கிற 22-ம் தேதி வரை நீதி​மன்றக் காவலில் சிறை​யில் அடைக்க உத்​தர​விட்​டார். இதையடுத்​து, அவர்​கள் அனை​வரும் புழல் மத்​தி​ய சிறை​யில்​ அடைக்​கப்​பட்​டனர்​.

SCROLL FOR NEXT