பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.ஐ. சங்கரை நலம்விசாரித்த காவல் கண்காணிப்பாளர் அனிதா.

 
க்ரைம்

பெரம்பலூர் அருகே ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை: நடந்தது என்ன?

செய்திப்பிரிவு

பெரம்பலூர்: பெரம்​பலூர் அருகே ரவுடி வெள்​ளைக் காளியை நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற வழக்​கில் கைது செய்​யப்​பட்ட ரவுடி அழகு ராஜா நேற்று அதி​காலை போலீ​ஸார் மீது வெடிகுண்டை வீச முயன்​ற​போது சுட்​டுக் கொல்​லப்​பட்​டார்.

மதுரை காம​ராஜபுரம் முத்​து​ராமலிங்க தேவர் தெரு​வைச் சேர்ந்​தவர் காளி​முத்து என்ற வெள்​ளைக் காளி(40). மதுரை மேல அனுப்​பானடியைச் சேர்ந்​தவர் கொட்டு ராஜா என்​கிற அழகு​ராஜா(30). பிரபல ரவுடிகளான இரு​வருக்​கும் இடையே பல ஆண்​டு​களாக முன்​விரோதம் இருந்துள்​ளது. இரு தரப்​பிலும் 10-க்​கும் அதி​க​மானோர் கொலை செய்​யப்​பட்​டுள்​ளனர்.

          

வெள்​ளைக் காளி புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், அழகு​ராஜா ஜாமீனில் வெளியே இருந்​தார். இதனிடையே, திண்​டுக்​கல் நீதி​மன்​றத்​தில் வெள்​ளைக் காளியை ஆஜர்​படுத்​திய போலீ​ஸார் மீண்​டும் சென்னை புறப்​பட்​டனர். வழி​யில், பெரம்​பலூர் திரு​மாந்​துறை சுங்​கச்​சாவடி அருகே 15 பேர் கொண்ட கும்​பல் நாட்டு வெடிகுண்​டு​களை வீசி வெள்​ளைக் காளியை கொல்ல முயன்​றது. பாது​காப்​புக்கு வந்த போலீ​ஸார் துப்​பாக்​கிச் சூடு நடத்​தி​ய​தால், அந்த கும்​பல் தப்​பியோடியது. இதில் 3 போலீ​ஸார் காயமடைந்​தனர்.

இந்த கும்​பலைப் பிடிப்​ப​தற்​காக பெரம்​பலூர் எஸ்​.பி. அனிதா தலை​மை​யில் 5 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டன. இந்​நிலை​யில், நாட்டு வெடிகுண்டு வீசி​ய​வர்​களில் சிலர் ஊட்​டி​யில் இருப்​ப​தாக கிடைத்த தகவலின்​பேரில் தனிப்​படை போலீ​ஸார் விசா​ரித்​து, அழகு​ராஜா மற்​றும் அவருடன் இருந்த கார்த்​திக்​(29), அலெக்ஸ் பாண்​டியன்​(24), அரவிந்த்​(29), வினோத்​கு​மார்​(34), பாண்டி முனீஸ்​வரன்​(27), நிர்​மல்​கு​மார் (26) ஆகியோரைக் கைது செய்​து, பெரம்​பலூருக்கு அழைத்து வந்​தனர். அழகு​ராஜா​வின் உறவினர்​கள் குரு​சாமி, மணி ஆகியோரை வெள்​ளைக் காளி சிறை​யில் இருந்​த​வாறே கொலை செய்ய திட்​ட​மிட்​டிருப்​பது தெரிய​வந்​த​தால், தாங்​கள் வெள்​ளைக் காளியை கொல்ல முயன்​ற​தாக அழகு​ராஜா தரப்​பினர் தெரி​வித்​த​தாகக் கூறப்​படு​கிறது.

பின்​னர், கொலை முயற்​சிக்​குப் பயன்​படுத்​திய ஆயுதங்​கள், மீதமிருந்த நாட்டு வெடிகுண்​டு​களை திரு​மாந்​துறை சுங்​கச்​சாவடி அருகே பதுக்கி வைத்​திருப்​ப​தாக அழகு​ராஜா தெரி​வித்​துள்​ளார். இதையடுத்​து, போலீ​ஸார் நேற்று அதி​காலை அழகு​ராஜாவை அங்கு அழைத்​துச் சென்​றனர். அப்​போது, திடீரென அழகு​ராஜா நாட்டு வெடிகுண்டை போலீ​ஸார் மீது வீசி​யுள்​ளார். அது போலீஸ் வாக​னம் மீது விழுந்து வெடித்​தது.

இதையடுத்​து, குன்​னம் எஸ்​.ஐ. சங்​கர், அழகு​ராஜாவைப் பிடிக்க முயன்​றார். அப்​போது அழகு​ராஜா அரி​வாளால் சங்​கரின் கையில் வெட்​டி​விட்டு தப்​பியோடி​னார். உடனே, மங்​களமேடு ஆய்​வாளர் நந்​தகு​மார் துப்​பாக்​கி​யால் சுட்​ட​தில், அழகு​ராஜா குண்டு பாய்ந்து உயி​ரிழந்​தார். காயமடைந்த எஸ்​.ஐ. சங்​கர் பெரம்​பலூர் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். மத்​திய மண்டல ஐ.ஜி. பால​கிருஷ்ணன், எஸ்​.பி. அனிதா ஆகியோர் அவரை சந்​தித்து நலம் விசா​ரித்​தனர்.

நீதிபதி விசாரணை: பின்​னர், குன்​னம் குற்​ற​வியல் நீதி​மன்ற நீதிபதி ராஜசேகர், சம்பவ இடத்​தைப் பார்​வை​யிட்டு விசா​ரணை நடத்​தி​னார். அழகு​ராஜா​வின் உடல் நீதிபதி முன்​னிலை​யில் பிரேதப் பரிசோதனை செய்​யப்​பட்​டது. மேலும், அழகு​ராஜாவுடன் கைது செய்​யப்​பட்ட மற்ற 6 பேரை​யும் பெரம்​பலூர் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​திய போலீ​ஸார், பின்​னர் சிறை​யில் அடைத்​தனர்.

SCROLL FOR NEXT