புதுவையில் சீல் வைக்கப்பட்ட போலி மருந்து தொழிற்சாலை

 
க்ரைம்

புதுச்சேரி போலி மருந்து தொழிற்சாலை வழக்கு: மருந்துகளை கைப்பற்றி சிபிஐ தீவிர விசாரணை

தொடர்புடையவர்களுக்கு சம்மன் அனுப்ப திட்டம்

செய்திப்பிரிவு

புதுச்சேரி: ​போலி மருந்து தொழிற்​சாலை வழக்கு தொடர்​பாக புதுச்​சேரி​யில் முகாமிட்​டுள்ள சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணையை தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர். புதுச்​சேரி சிபிசிஐடி கைப்​பற்றி வைத்​திருந்த மருந்​துகளை​யும் நேற்று தங்​கள் வசப்​படுத்​தி​யுள்​ளனர்.

புதுச்​சேரி மேட்​டுப்​பாளை​யத்​தில் போலி மருந்து தொழிற்​சாலை கண்​டறியப்​பட்​டது. இந்த தொழிற்​சாலைக்கு புதுவை நோணாங்​குப்​பம், மேட்​டுப்​பாளை​யம் உள்பட 13 இடங்​களில் குடோன்​கள் இருப்​பது தெரிய​வந்​தது.

குடோன்​களில் பல கோடி ரூபாய் மதிப்​புள்ள போலி மருந்​துகள் இருப்பு வைக்​கப்​பட்​டிருந்​தன. இவற்றை சிபிசிஐடி போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர்.

போலி மருந்து தொழிற்​சாலை உரிமை​யாளர் ராஜா உள்பட 26 பேரை கைது செய்​தனர். பல மாநிலங்​களு​டன் தொடர்பு இருந்​த​தால் இவ்​வழக்கு சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றப்​பட்​டது.

சிபிஐ அதி​காரி​கள் தற்​போது வழக்​கின் விசா​ரணையை தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர். சிபிஐ இன்​ஸ்​பெக்​டர் அமித்​ச​ராவத் தலை​மையி​லான குழு​வினர் இதன் விசா​ரணைக்​காக புதுச்​சேரி​யில் முகாமிட்​டுள்​ளனர். புதுச்​சேரி சிபிசிஐடி போலீ​ஸாரை சந்​தித்​து, வழக்கு தொடர்​பான பல்வேறு ஆவணங்​கள் மற்றும் அறிக்​கைகளை பெற்​றுள்​ளனர்.

இந்​நிலை​யில் நேற்று சிபிசிஐடி போலீ​ஸார் கைப்​பற்றி வைத்​திருந்த போலி மருந்​துகளை​யும் தங்​கள் வசப்​படுத்​தி​யுள்​ளனர். மேலும் வழக்​கில் தொடர்​புடைய​வர்​களுக்கு சம்​மன் அனுப்பி விசா​ரணை நடத்த திட்​ட​மிட்​டுள்​ளனர். சிபிஐக்கு மாற்​றப்​பட்ட முதல் சில நாட்​களில் இவ்​வழக்கு தொய்​வாக இருந்​தது. தற்​போது சிபிஐ தனது விசா​ரணையை தீவிரப்​படுத்​தி​உள்​ளது.

SCROLL FOR NEXT