க்ரைம்

சென்னை | மருத்துவமனையில் செல்போன் திருடிய 2 பேர் மீது பொதுமக்கள் தாக்குதல்

செய்திப்பிரிவு

சென்னை: கடலூர் மாவட்​டம், விருத்​தாச்​சலம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் ரவிக்​கு​மார் (35). உடல் நலக்​குறைவு காரண​மாக,சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு உள் நோயாளி​யாக சிகிச்சை பெற்று வரு​கிறார்.

ரவிக்​கு​மார் நேற்றுமுன்​தினம் அதி​காலை மருத்​து​வ​மனை யில் தூங்​கிக் கொண்​டிருந்​த​போது திடீரென சத்​தம் கேட்டு எழுந்து பார்த்​த​போது, அவர் அரு​கில் வைத்​திருந்த செல்​போனை, 2 பேர் திருடிக் கொண்டு தப்பி ஓடினர். இதைப் பார்த்த ரவிக்​கு​மார் உடனடி​யாக கூச்​சலிட்​டார்.

          

அவரது சத்​தம் கேட்டு அரு​கி​லிருந்​தவர்​கள் தப்ப முயன்ற இரு​வரை​யும் மடக்​கிப் பிடித்து தர்ம அடி கொடுத்​தனர். பின்​னர், அவர்​களை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை காவல் நிலை​யத்​தில் ஒப்​படைத்​தனர்.

பிடிபட்​ட​வர்​கள் வேலூர் மாவட்​டம் அணைக்​கட்டு பகு​தி​யைச் சேர்ந்த வினோத்​கு​மார் (35), சென்னை புளியந்​தோப்​பைச் சேர்ந்த ஜாகீர் உசேன் (52) என்​பது தெரிந்​தது.

செல்போன்கள் பறிமுதல்

இதையடுத்து, இரு​வரை​யும் போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். முன்​ன​தாக, அவர்​களிட​மிருந்து 3 செல்போன்கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

SCROLL FOR NEXT