பைக் சாகசத்தில் ஈடுபட்டவாறு இரும்பு சாலை தடுப்பை இழுத்துச் சென்ற இளைஞர்கள்.

 
க்ரைம்

இரும்பு தடுப்புகளை சாலையில் இழுத்துச் சென்று ரகளை: சென்னையில் பைக் சாகசங்களில் ஈடுபட்ட இளைஞர்களால் பொதுமக்கள் அச்சம்

சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

செய்திப்பிரிவு

சென்னை: முக்​கிய சாலைகளில் இளைஞர்​கள் அதிவேக​மாக பைக்​கு​களை இயக்கி வீலிங் உள்​ளிட்ட ஆபத்​தான பைக் சாகசங்​களில் ஈடு​படு​வது தொடர்​கிறது.

இந்த சாகசங்​களை வீடியோ​வாக பதிவு செய்து சமூக வலை​தளங்​களி​லும் வெளி​யிடு​கின்​றனர். இதனால், பொதுமக்கள் மற்​றும் வாகன ஓட்​டிகளிடையே அச்​சம் நில​வு​கிறது.

இந்​நிலை​யில், அடை​யாறு, பெசன்ட் நகர் உள்​ளிட்ட பகு​தி​களில் சில இளைஞர்​கள், போலீ​ஸார் சாலை​யில் பாது​காப்பு ஏற்​பாடு​களுக்​காக வைத்​திருந்த இரும்பு தடுப்​பு​களை பைக்​கில் தரதர​வென இழுத்​துச் சென்​றனர்.

அப்​போது, தடுப்​பு​கள் சாலை​யில் உரசி​ய​தால் தீப்​பொறிகள் பறந்​தன. மற்​றொரு இளைஞர், பைக்​கின் முன் பக்க வீலை மேலே தூக்கி ஆபத்​தான முறை​யில் அதிவேக​மாக செல்​கிறார்.

இன்​னொரு​வர் இங்​கும், அங்​கு​மாக வளைந்​து, வளைந்து செல்​கிறார். இப்​படி, 5-க்​கும் மேற்​பட்ட இளைஞர்​கள் தனித் தனி​யாக​வும், இரு​வ​ராக சேர்ந்​தும் பைக் சாகசத்​தில் ஈடு​பட்​டனர்.

இதனை அவர்​கள் வீடியோ​வாக பதிவு செய்து சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்​டுள்​ளனர். இது வேக​மாக பரவி பொது​மக்​களிடையே அச்​சத்தை ஏற்​படுத்தி உள்​ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீ​ஸார், வைரலான வீடியோவை கைப்​பற்றி அதை அடிப்​படை​யாக வைத்து பைக்சாகசங்​களில் ஈடு​பட்ட இளைஞர்​களை தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்.

பொது​மக்​களின் உயிருக்கு ஆபத்தை ஏற்​படுத்​தும் வகை​யில் சாகசங்​களில் ஈடு​படு​வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என, காவல் ஆணை​யர் அமல்​ராஜ் எச்​சரித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT