அஜீத், சரசம்மாள்

 
க்ரைம்

சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர் கொலை: தடுக்க வந்த தாயையும் வெட்டி தப்பிய கும்பல்

செய்திப்பிரிவு

சென்னை: ஐஸ் அவுஸ் பகு​தி​யில், தாயின் கண் எதிரே தனி​யார் தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர் வெட்டி கொலை செய்​யப்​பட்​டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்​பில் கூறப்​படு​வ​தாவது: சென்னை ஐஸ் அவுஸ் காவல் நிலைய எல்​லைக்கு உட்​பட்ட திரு​வல்​லிக்​கேணி வி.ஆர்​.பிள்ளை தெரு​வைச் சேர்ந்​தவர் அஜீத்​(25).

தனி​யார் தொலைத்​தொடர்பு நிறு​வனத்​தில் வேலை செய்து வந்​தார். தனது தாய் சரசம்​மாள், தந்தை நடராஜன் ஆகியோ​ருடன் வசித்து வந்​தார். இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு பணி முடித்து வீடு திரும்​பிய அஜீத், 10.50 மணி​யள​வில் தனது பெற்​றோருடன் பேசிக்​கொண்​டிருந்​தார்.

அப்​போது அங்கு வந்த 2 பெண்​கள், அஜீத்​திடம் பேச வேண்​டும் என்று கூறி அவரை வீட்​டுக்கு வெளியே அழைத்​தனர். அங்கு பதுங்கி இருந்த 5 பேர் கொண்ட கும்​பல் திடீரென அஜீத்​தைச் சுற்​றிவளைத்​து, சரமாரியாக வெட்டினர்.

இதைக்​கண்டு அதிர்ச்சி அடைந்த சரசம்​மாள், மகனைக் காப்​பாற்​ற சென்றார். அவரையும் வெட்டிவிட்டு கும்பல் தப்பியது. இதில் படு​கா​யம் அடைந்த அஜீத் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

இதுகுறித்து ஐஸ் ஹவுஸ் போலீ​ஸார் கொலை வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்​தினர். இதில், கொலை செய்​யப்​பட்ட அஜீத்​துக்​கும், அதே பகு​தி​யைச் சேர்ந்த ரவுடிகளான ஹரிஷ் மற்​றும் போண்டா ராஜேஷ் தரப்​பினருக்​கும் இடையே நீண்​ட​கால​மாக முன்​விரோதம் இருந்து வந்​துள்​ளது.

குறிப்​பாக அப்​பகு​தி​யில் யார் பெரிய ஆள்? என்​ப​தில் போட்டி நில​வி​யுள்​ளது. இதனால், இரு தரப்​பைச் சேர்ந்​தவர்​களும் மாறி, மாறி மோதலில் ஈடு​பட்டு வந்​துள்​ளனர்.

கடந்த 2020-ம் ஆண்டு போண்டா ராஜேஷை அஜீத்​தும் அவரது சகோ​தரரும் கூட்​டாளி​களு​டன் சேர்ந்து கொலை செய்ய முயன்​ற​தாக​வும், அந்த சம்​பவத்​தில் ராஜேஷ் படு​கா​யம் அடைந்து உயிர் தப்​பிய​தாக​வும் கூறப்​படு​கிறது. அந்த மோதலில் அஜீத்​தின் சகோ​தரருக்கு வெட்​டுக்​கா​யம் ஏற்​பட்​டுள்​ளது.

மேலும், கஞ்​சா, போதை மாத்​திரைகள் விற்​பனை செய்​வது தொடர்​பாக அஜீத்​தின் சகோ​தரருக்​கும், ஹரிஷுக்​கும் இடையே பிரச்​சினை இருந்தது தெரியவந்துள்ளது.

இக்​கொலை தொடர்​பாக ஹரிஷ் (23) மற்​றும் போண்டா ராஜேஷ் (22) ஆகிய 2 பேரை போலீ​ஸார் கைது செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT