க்ரைம்

மயக்க மருந்து கொடுத்து மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை: தனியார் மருத்துவமனை உரிமையாளர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: கொடுங்​கையூரைச் சேர்ந்த மாணவி ஒரு​வர் சென்​னை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​யில் பிஎஸ்சி பிசி​யோ தெரபி 4-ம் ஆண்டு படித்து வரு​கிறார். இவர் பெரம்​பூரில் உள்ள பிரபல மருத்​து​வ​மனை ஒன்​றில் பயிற்சி பெற்று வந்​தார். அந்த மருத்​து​வ​மனை​யில் ரூ.4 ஆயிரம் மாதாந்​திர ஊக்​கத் தொகை பெற்ற மாணவி அந்த மருத்​து​வ​மனை உரிமை​யாள​ரான பிசி​யோதெரபிஸ்ட் மீது கொளத்​தூர் மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் ஒன்றை அளித்​தார்.

அதில், ``பெரம்​பூரில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை உரிமை​யாள​ரும், பிசி​யோதெரபிஸ்​டு​மான கார்த்​தி​கேயன் நேற்று முன்​தினம் காலை 6.30 மணிக்கு எனக்கு போன் செய்​து, நோயாளி ஒரு​வருக்கு சிகிச்சை அளிக்க வரு​மாறு அழைத்​தார். எனவே பகல் 1 மணி அளவில் நான் மருத்​து​வ​மனைக்கு சென்​றேன்.

அதன் பிறகு, அவரது காரில் என்னை ஏற்​றிக்கொண்டு பெண் ஒரு​வருக்கு மசாஜ் சிகிச்சை அளிக்க வேண்​டும் என்று கூறி​னார். இதை நம்பி நான் அவருடன் கொளத்​தூர்பகு​தி​யில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​புக்கு காரில் சென்​றேன். அப்​போது கார்த்​தி​கேயன் காரில் இருந்த குளிர்​பானத்தை எனக்கு கொடுத்​தார்.

அதைக் குடித்​ததும் நான்மயங்​கி​விட்​டேன். அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பில் ஓர் அறைக்​குள் சென்ற பிறகு எனக்கு என்ன நடந்​தது என்று தெரிய​வில்​லை. நீண்ட நேரம் கழித்து கண்​விழித்​துப் பார்த்​த​ போது எனது உடலில் ஆடைகள் எது​வும் இல்​லை. என்னை அழைத்​துச் சென்ற கார்த்​தி​கேயனும் ஆடை​யின்றி படுக்​கை​யில் எனது அரு​கில் படுத்​திருந்​தார்.

அதிர்ச்சி அடைந்த நான் அவரை தள்​ளி​விட்டு உடைகளை அணிந்து கொண்டு அங்​கிருந்து அச்​சத்​துடன் வீட்​டுக்கு வந்து விட்​டேன். பயந்​து​போய்யாரிட​மும் சொல்​லாமல் இருந்​தேன். பின்​னர் இதுபற்றி எனது அக்​கா​விடம் கூறினேன்.

குளிர்​பானத்​தில் மயக்க மருந்து கொடுத்து என்​னுடன் தகாத உறவில் ஈடு​பட்ட கார்த்​தி​கேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்'' என்று புகார் மனு​வில் கூறப்​பட்டு இருந்தது.

அந்த மாண​வி​யின் புகார் உண்மை எனத் தெரிய​வந்​ததை அடுத்​து, குற்​றச்​சாட்​டுக்கு உள்​ளான கார்த்​தி​கேயனை போலீ​ஸார் கைது செய்​தனர். மாண​வியை அடைவதற்கு திட்​ட​மிட்ட கார்த்​தி​கேயன் இதற்​காக நோயாளி ஒரு​வருக்கு பிசி​யோதெரபி செய்ய வேண்​டும் என்று ஏமாற்றி மாண​வியை தனது காரில் அழைத்​துச் சென்​றிருப்​பது வி​சா​ரணை​யில்​ தெரிய​வந்​துள்​ள​தாக போலீ​ஸார்​ தெரிவித்​தனர்​.

SCROLL FOR NEXT