ராஜா

 
க்ரைம்

கஞ்சா கடத்திய வழக்கில் தண்டனை அறிவித்ததும் தப்பிய கைதி

செய்திப்பிரிவு

மதுரை: கஞ்சா வழக்​கில் தண்​டனை விவரத்தை நீதிபதி அறி​வித்​ததும் தப்​பியோடிய கைதியை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

திண்​டுக்கல் மது​விலக்கு அமலாக்​கப்​ பி​ரிவு போலீ​ஸார் கடந்த 2024 மே 20-ம் தேதி திருச்சி - திண்​டுக்​கல் சாலை​யில் அய்​யலூர் வண்டி கருப்​பணசாமி கோயில் அருகே வாக​னத் தணிக்​கை ​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

அப்​போது, திருச்​சி​யில் இருந்து திண்​டுக்​கல் நோக்​கிச் சென்ற ஆட்​டோவை சோதனை​யிட்​டனர். அதில் 30 கிலோ கஞ்சா கடத்​திச் செல்​வது தெரிய​வந்​தது. இது தொடர்​பாக திண்​டுக்​கல்​லைச் சேர்ந்த சுப்​பிரமணி, மதன்​குமார், மதுபாலன், தாமரைக்​கண்​ணன், மாதவன், ராஜா ஆகிய 6 பேர் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர்.

இந்த வழக்கு விசா​ரணை மதுரை 1-வது போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடந்​தது. நீதிபதி சுதாகர் முன்​னிலை​யில் நேற்று இறுதி விசா​ரணை நடந்​தது. அரசு தரப்​பில் சிறப்பு அரசு வழக்​கறிஞர் சவுரிராமன் ஆஜரானார். அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி சுதாகர், வழக்​கில் தொடர்​புடைய 6 பேருக்​கும் தலா 10 ஆண்​டுகள் சிறைத் தண்​டனை, தலா ரூ.1 லட்​சம் அபராதம் விதித்து தீர்ப்​பளித்​தார்.

இதைத் தொடர்ந்து நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டிருந்த 6 பேரை​யும் சிறைக்கு அழைத்​துச் செல்ல போலீ​ஸார் ஆயத்​த​மாகினர். அப்​போது, ராஜா மட்​டும் நீதி​மன்​றத்​தில் இருந்து தப்​பிச் சென்​று​விட்​டது தெரிய​வந்​தது. அவரை போலீ​ஸார் தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT