பொன்னை பாலு

 
க்ரைம்

ஆம்ஸ்ட்ராங் கொலை: பொன்னை பாலுவுக்கு 5 நாள் ஜாமீன்

செய்திப்பிரிவு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பொன்னை பாலுவுக்கு 5 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பொன்னை பாலு, மணிகண்டன், புதூர் அப்பு ஆகியோருக்கிடையே ஜாமீன் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் பொன்னை பாலுவின் தாயார் இறந்துவிட்டதால்.

          

இறுதிச் சடங்கில் பங்கேற்க அவருக்கு இடைக்கால ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக நடந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பொன்னை பாலுவுக்கு 5 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT