க்ரைம்

திருச்சியில் திமுக ஆர்ப்பாட்டத்தின்போது மதுபோதையில் இருந்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

திருச்சி: தேசிய ஊரக வேலை உறு​தி​யளிப்பு திட்​டத்​தில் மகாத்மா காந்தி பெயரை நீக்​கிய மத்​திய அரசைக் கண்​டித்​து, திமுக மற்​றும் கூட்​ட​ணிக் கட்​சிகள் சார்​பில் திருச்சி ஆட்​சி​யர் அலு​வல​கம் அருகே நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

ஆர்ப்​பாட்​டத்​தின்​போது பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த ஆயுதப்​படை காவலர் சதீஷ்கு​மார் என்​பவர் மது​போதை​யில் இருப்​ப​தாக சந்​தேகம் எழுந்​தது. இதையடுத்து, அவரை திருச்சி அரசு மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்று பரிசோதனை மேற்​கொண்​டனர்.

பரிசோதனை​யின் முடி​வில், சதீஷ்கு​மார் மது​போதை​யில் இருந்​தது உறுதி செய்​யப்​பட்​டது. தொடர்ந்​து, திருச்சி மாநகர காவல் ஆணை​யர் காமினி​யின் உத்​தர​வின்​படி, பணி​யின்​போது மதுபோதை​யில் இருந்த சதீஷ்கு​மார் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளார்​.

SCROLL FOR NEXT