ஐயப்பன்
தென்காசி: ஆலங்குளம் அருகே திருமண நிகழ்ச்சியில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நெட்டூரில் கடந்த 29-ம் தேதி நடந்த திருமண நிகழ்ச்சியில் முகமூடி அணிந்த கும்பல் நுழைந்து, அங்கு இருந்தவர்களை அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியது. இதில் 6 பேர் காயமடைந்தனர். இதையடுத்து தனிப்படை போலீஸார், சுத்தமல்லி அருகே இசக்கிமுத்து, 3 சிறுவர் களையும் ட்ரோன் மூலம் தேடுதல் வேட்டை நடத்தி, நெட்டூரைச் சேர்ந்த மாரியப்பன், பிரமுத்துநவீன், சஞ்சய் என மொத்தம் 8 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், முக்கிய நபரான நெட்டூர் ஐயப்பன் முக்கூடல் அருகே பதுங்கி இருந்தபோது, போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது அவர் அரிவாளால் போலீஸாரை வெட்டியுள்ளார். இதில் ஏட்டு முத்துக்குமார், காவலர் பால சுப்பிரமணியனுக்குகையில் காயம் ஏற்பட்டது. போலீஸார் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் ஐயப்பனின் வலது காலில் குண்டு பாய்ந்தது. அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.மேலும் சிலரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.