கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2,449 கிலோ கஞ்சாவை தீயிலிட்டு அழிக்கும் காவல் துணை ஆணையர் சக்திவேல்.

 
க்ரைம்

கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2,449 கிலோ கஞ்சாவை தீயிட்டு அழித்த போலீஸார்

செய்திப்பிரிவு

சென்னை: கடத்​தல் காரர்​களிட​மிருந்து பறி​முதல் செய்​யப்​பட்ட 2,449 கிலோ கஞ்​சாவை போலீ​ஸார் தீயிட்டு அழித்​தனர். சென்​னை​யில் போதைப் பொருள் கடத்​தல், பதுக்​கல் மற்​றும் விற்​பனையைத் தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்​வாளர்​கள் தலை​மை​யிலும் தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

தனிப்​படை போலீ​ஸார் தீவிர ரோந்து மற்​றும் கண்​காணிப்​பில் ஈடு​பட்​டுள்​ளனர். இதன் தொடர்ச்​சி​யாக சென்​னை​யில் 784 போதைப்​பொருள் வழக்​கு​களில் தொடர்​புடைய 2,449 கிலோ கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டது.

இவற்றை தீயிட்டு அழிக்க நீதி​மன்​றம் அனு​மதி வழங்​கியது. இதையடுத்து சென்னை காவல் துறை துணை ஆணை​யர் (நுண்​ணறி​வுப் பிரிவு-1) சக்​திவேல், தடய அறி​வியல் துறை உதவி இயக்​குநர் கே.தேவ​ராஜன் தலை​மை​யில் செங்​கல்​பட்டு மாவட்​டம் தென்​மேல்​பாக்​கத்​தில் உள்ள தனி​யார் நிறுவன ஆலை​யில் கஞ்சா தீயி​லிட்டு எரித்து அழிக்​கப்​பட்​டது.

இளைஞர்​களைப் போதைப்​பொருள் பழக்​கத்​திலிருந்து பாது​காப்​ப​தற்​கும், சுகா​தா​ரம், பாதுகாப்பை உறுதி செய்​வதற்​கும், போதைப்​பொருள் கடத்​தல்​காரர்​கள் மற்​றும் அவர்​களது வலை​யமைப்​பு​களுக்கு எதி​ராக காவல் துறை கடுமை​யான நடவடிக்​கைகளை எடுக்​கும் என காவல் ஆணை​யர் அமல்​ராஜ் எச்​சரித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT