க்ரைம்

சென்னை: மணம் முடிப்பதாக ஏமாற்றி பெண் போலீஸை திருமணம் செய்ய மறுத்த காவலர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: பெண் காவலரை திருமணம் செய்து கொள்​வ​தாகக் கூறி ஏமாற்றி பின்​னர் திரு​மணம் செய்ய மறுத்​த புகாரில், காவலர் கைது செய்​யப்​பட்​டார்.

புதுக்​கோட்டை மாவட்​டம் இலுப்​பூர் பகு​தி​யைச் சேர்ந்த அஜய் ஆகாஷ் (26) திருச்சி பட்​டா​லியனில் காவல​ராகப் பணி​யாற்​றுகிறார். இவருக்​கும், சென்​னை​யில் பணி​யாற்​றும் பெண் காவலருக்​கும் பழக்​கம் ஏற்பட்டுள்​ளது.

அவரையே திருமணம் செய்​வ​தாக அஜய் ஆகாஷ் உறுதி அளித்​த​தாகவும் கூறப்​படு​கிறது. இரு​வரும் 2025 முதல் எழும்​பூர் காவலர் குடி​யிருப்​பில் ஒரே வீட்​டில் கணவன் - மனைவி போல வசித்து வந்​துள்​ளனர்.

பின்​னர், பெண் காவலர் வேறு சமூகத்​தைச் சேர்ந்​தவர் என்​ப​தால், தன் வீட்​டார் பேச்​சைக் கேட்டு திரு​மணத்​துக்கு அஜய் ஆகாஷ் மறுப்பு தெரி​வித்​துள்​ளார். அவருக்கு வேறொரு பெண்​ணுடன் நிச்​சய​தார்த்​தம் நடந்​த​தாக​வும் கூறப்​படு​கிறது.

இதுகுறித்து பெண் காவலர் கடந்த ஜூன் மாதம் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் கொடுத்​தார். அதன்​பேரில், எழும்​பூர் மகளிர் போலீ​ஸார் வழக்​குப் பதிந்தனர்.

இதை அறிந்து அஜய் ஆகாஷ் தலை மறை​வா​னார். இந்​நிலை​யில், சென்னை முதன்மை செஷன்ஸ் நீதி​மன்​றத்​தில் அஜய் ஆகாஷ் 26-ம் தேதி சரணடைந்​தார். அப்​போது, பெண் காவலர் தன்​னிடமிருந்த ஆதா​ரங்​களை நீதிபதி செந்​தில்​கு​மாரிடம் சமர்ப்​பித்​தார்.

இதையடுத்​து, அஜய் ஆகாஷை டிச.10 வரை நீதி​மன்​றக்காவலில் வைக்க நீதிபதி உத்​தர​விட்​டார். போலீ​ஸார் அவரை கைது செய்​தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT