க்ரைம்

பைக் ரேஸில் ஈடுபடுபவர்களை பிடிக்க சென்னையில் இரவு முழுவதும் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீஸார்

செய்திப்பிரிவு

சென்னை: பைக் ரேஸில் ஈடு​படு​பவர்​களை பிடிக்க சென்னை போலீ​ஸார் நேற்று முன்​தினம் இரவு முழு​வதும் வாக​னத் தணிக்​கை​யில் ஈடு​பட்​டனர். சென்​னை​யில் சில இடங்​களில் இரவில் பைக் ரேஸ் நடப்​ப​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது.

குறிப்​பாக அண்ணா சாலை, கிழக்கு கடற்​கரைச் சாலை, காம​ராஜர் சாலை, பூந்​தமல்லி நெடுஞ்​சாலை உட்பட பல்​வேறு பிர​தான சாலைகளில் இந்த பைக் ரேஸ் நடப்​ப​தாக புகார் எழுந்​தது.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீ​ஸாருக்கு காவல் ஆணை​யர் அருண் உத்​தர​விட்​டார். அதன்​படி நேற்று முன்​தினம் இரவு போக்​கு​வரத்து போலீ​ஸாருடன், சட்​டம் ஒழுங்கு மற்​றும் குற்​றப்​பிரிவு போலீ​ஸார் ஒருங்​கிணைந்து கண்​காணிப்​பில் ஈடு​பட்​டனர்.

குறிப்​பாக சென்னை முழு​வதும் சாலைகளில் தடுப்​பு​கள் அமைத்து கண்​காணித்​தனர். இதில் அதிவேக​மாக பைக்​கில் வந்த சில இளைஞர்​கள் பிடிபட்​டனர். அவர்ளை போலீ​ஸார் எச்​சரித்து அனுப்பி வைத்​தனர்.

முன்​ன​தாக நேற்று முன்​தினம் மதி​யம் கே.கே.நகர் ராம​சாமி சாலை வழி​யாக அதிவேக​மாக பைக்​கில் வந்த கே.கே. நகரைச் சேர்ந்த தீபக் (20), அவரது நண்​ப​ரான அதே பகு​தி​யைச் சேர்ந்த ஆகாஷ் (21) ஆகிய இரு​வரை போலீ​ஸார் கைது செய்​தனர். மேலும் பைக்​கை​யும் பறி​முதல் செய்​தனர்.

பொது​மக்​களுக்​கும், போக்​கு​வரத்​துக்​கும் இடையூறாக மற்​றும் உயிருக்கு அச்​சம் ஏற்​படுத்​தும் வகை​யில் அதிக ஒலி​யுடன், வாக​னத்தை அதிவேக​மாக ஓட்​டும் நபர்​கள் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் என சென்னை காவல்​ ஆணை​யர்​ அருண் எச்சரித்துள்ளார்.

SCROLL FOR NEXT