திருத்தணி: சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞர், உறவினர்கள் உட்பட 4 பேர் மீது போலீஸார் போக்சோ வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு திருத்தணி ஸ்டாலின் நகரைச் சேர்ந்த சதீஷ் (31) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியை அவரது கணவர் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றபோது 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
குழந்தை திருமணம் நடைபெற்றது குறித்து அரசு மருத்துவமனை தகவலின் பேரில் திருத்தணி போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் கணவரான சதீஷ் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த சதீஷின் தந்தை சிவா, தாய் சரளா, சிறுமியின் தாய் பவானி ஆகியோர் மீதும் போலீஸார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.