காரைக்குடி சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் உள்ள கார்த்தி சிதம்பரம் எம்.பி. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இடத்தை பார்வையிட்ட மாங்குடி எம்எல்ஏ உள்ளிட்டோர். (உள்படம்) பெட்ரோல் குண்டு வீசிய இடம்.

 
க்ரைம்

காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை

செய்திப்பிரிவு

காரைக்குடி: ​காரைக்​குடி​யில் முன்​னாள் மத்​திய அமைச்​சர் ப.சிதம்​பரம், அவரது மகன் கார்த்தி சிதம்​பரம் எம்​.பி. அலு​வல​கத்​தில் பெட்ரோல் குண்டு வீசி​யது குறித்து சிவகங்கை மாவட்​டக் காவல் கண்​காணிப்​பாளர் விசா​ரணை நடத்​தி​னார்.

சிவகங்கை மாவட்​டம் காரைக்​குடி சுப்​பரமணி​யபுரம் முதல் வீதி​யில் ப.சிதம்​பரம், கார்த்தி சிதம்​பரம் அலு​வல​கம் உள்​ளது. நேற்று காலை அலு​வல​கத்தை ஊழியர்​கள் திறக்க வந்​த​போது, நுழை​வாயி​லில் 2 இடங்​களில் பெட்ரோல் எரிந்த அடை​யாள​மும், உடைந்த பாட்​டில்​களும் கிடந்​தன. தகவலறிந்து மாங்​குடி எம்​எல்ஏ மற்​றும் காங்​கிரஸார் அங்கு வந்​தனர்.

          

பின்​னர் இதுகுறித்து போலீ​ஸாருக்கு தகவல் கொடுத்​தனர். தொடர்ந்து அங்கு வந்த மாவட்​டக் காவல் கண்​காணிப்​பாளர் சிவபிர​சாத் மற்​றும் காரைக்​குடி வடக்கு போலீ​ஸார் விசா​ரித்​தனர். தடய​வியல் நிபுணர்​கள் தடயங்​களைச் சேகரித்​தனர்.

முதல்​கட்ட விசா​ரணை​யில் 2 பாட்​டில்​களில் பெட்ரோல் குண்டு வீசி​யது தெரிய​வந்​தது. மேலும், அலு​வல​கத்​தில் சிசிடிவி கேமரா இல்​லாத​தால் பெட்ரோல் குண்டு வீசி​ய​வர்​களைக் கண்​டறிவ​தில் சிக்​கல் ஏற்​பட்​டது.

தொடர்ந்து அரு​கே​யுள்ள சிசிடிவி கேம​ராக்​களை​யும் மாவட்​டக் காவல் கண்​காணிப்​பாளர், போலீஸார் ஆய்வு செய்​தனர். பெட்ரோல் குண்டு வீசிய குற்​ற​வாளி​களைப் பிடிக்க 2 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT