க்ரைம்

கும்மிடிப்பூண்டி: நிலத்தை ஆக்கிரமிப்பவர் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையம் முன்பு தற்கொலை முயற்சி

செய்திப்பிரிவு

கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வழி கிராமத்தை சேர்ந்தவர் அருள் (40). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் தமக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாகவும், இது தொடர்பாக நிலத்தை அளவீடு செய்து தருமாறு வருவாய்த் துறையில் 2 முறை பணம் செலுத்தியும் நடவடிக்கை இல்லை என்றும், தற்போது தடுப்பு சுவர் அமைக்க செங்கற்களை இறக்கி பணிகள் தொடங்குவதால் காவல்துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனு அளித்துள்ளார்.

ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் அருள், கும்மிடிப்பூண்டி காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி உடலில் தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து சமரச பேச்சுவாரத்தை நடத்திய காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அங்கிருந்து அவரை அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT