க்ரைம்

சென்னையில் ரூ.24 லட்சம் கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

அடையாளம் காட்டிய சிசிடிவி கேமரா

செய்திப்பிரிவு

சென்னை: மேற்கு தாம்​பரம், கன்​னட​பாளை​யத்​தில் உள்ள மருந்து நிறு​வனத்​தில் விற்​பனை மேலா​ள​ராகப் பணி​யாற்றி வருபவர் அந்​தோணி அகஸ்​டின் (33).

இவர் கடந்த செப். 24-ம் தேதி இரவு, பாரி​முனைக்​குச் சென்று நிறு​வனத்​தின் வசூல் பணமான ரூ.24 லட்​சத்தை ஒரு பையில் எடுத்​துக்​கொண்டு பைக்​கில் நிறு​வனத்​துக்​குத் திரும்​பிக் கொண்​டிருந்​தார்.

அப்​போது அடை​யாறு, சர்​தார் வல்​ல​பாய் படேல் சாலை​யில் உள்ள அம்​பிகா அப்​பளம் சிக்​னலைக் கடந்தபோது, 3 பைக்​கு​களில் வந்த 6 பேர், அந்​தோணி அகஸ்​டினின் வாக​னத்தை வழிமறித்​து, அவரைத் தாக்கி கீழே தள்​ளியதுடன், கத்​தி​யைக் காட்டி மிரட்​டி, அவர் வைத்​திருந்த ரூ.24 லட்​சம் பணப் பையைப் பறித்​துக்​கொண்டு தப்​பிச் சென்​றனர்.

இதுகுறித்து அந்​தோணி அகஸ்​டின் அளித்த புகாரின்​பேரில், அடை​யாறு காவல் நிலைய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்​தினர்.

முதல் கட்​ட​மாக கொள்ளை நடந்த இடத்​தில் பொருத்​தப்​பட்​டிருந்த சிசிடிவி பதிவு​களை ஆய்வு செய்​ததின் அடிப்​படை​யில் தீவிர விசா​ரணை நடத்​தி, கொள்ளை வழக்​கில் தொடர்​புடைய​தாகக் கூறப்​படும் சென்​னை, தண்​டை​யார்​பேட்​டை, வ.உ.சி. நகரைச் சேர்ந்த பாபுவை (28) நேற்று முன்​தினம் கைது செய்​தனர்.

போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், பாபு தலைமறை​வாக உள்ள மற்ற குற்​ற​வாளி​களு​டன் சேர்ந்து கொள்​ளை​யில் ஈடு​பட்​டதும், கொள்​ளை​யடித்த பணத்​தைப் பங்​கிட்டு ஆடம்பர செலவு செய்​ததும் தெரிய​வந்​தது.

மேலும், பாபு மீது ஏற்​கெனவே 5 குற்ற வழக்​கு​கள் இருப்​பதும், அவர் புது​வண்​ணாரப்​பேட்டை காவல் நிலைய சரித்​திரப் பதிவேடு

குற்​ற​வாளி என்​பதும் தெரிய​வந்​தது. இந்தக் கொள்ளை வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT