கோப்புப் படம்
சென்னை: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் தரையிறங்க தொடங்கியது.
அந்த விமானத்தில் 142 பயணிகள் இருந்தனர். அந்த நேரத்தில், விமானத்தின் அவசரகால கதவை திறக்க யாரோ முயற்சிப்பதாக விமானியின் கேபினுள் எச்சரிக்கை மணி ஒலித்தது.
அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள், அவசரகால கதவை திறக்க முயற்சித்த நபரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், தெலங்கானாவைச் சேர்ந்த சைலம் (40) என்பவர் சென்னையில் வியாபாரம் செய்து வருவதாகவும், அவசரகால கதவு அருகே அமர்ந்திருந்த போது, தெரியாமல் அவசரகால கதவை திறக்கும் பட்டனை அழுத்தியதாகவும் தெரிவித்தார்.
அவரது விளக்கத்தை ஏற்க மறுத்த அதிகாரிகள், அவரை சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.