க்ரைம்

நாங்​குநேரி அருகே மகளை கொன்றதாக பெற்றோர் கைது

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்​வேலி மாவட்​டம் நாங்​குநேரி அருகே தகாத உறவை கைவிட மறுத்த இளம்​பெண் கொலை வழக்​கில், அவரது பெற்​றோரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

திருநெல்​வேலி மாவட்​டம் நாங்​குநேரி அருகே உள்ள செண்​பக​ராமநல்​லூரைச் சேர்ந்த விவ​சாயி சிவன், இவரது மனைவி வைரம்​மாள். இவர்​களது 3-வது மகள் அமுதா (22). திருமணமாகவில்லை. இவருக்கும், அவரது உறவின​ரான திரு​மண​மான இளைஞர் ஒரு​வருக்​கும் பழக்​கம் இருந்​தது. அமு​தாவை பெற்​றோர் கண்​டித்​தனர். இதனால் அடிக்​கடி தகராறு ஏற்​பட்டு வந்​துள்​ளது.

இந்​நிலை​யில், அமுதா தனது வீட்​டில் தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்​ட​தாக அவரது பெற்​றோர் நேற்று முன்​தினம் தெரி​வித்​தனர். மூலைக்​கரைப்​பட்டி போலீ​ஸார் அமு​தா​வின் உடலை கைப்​பற்றி பரிசோதனைக்​காக திருநெல்​வேலி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

போலீ​ஸார் விசா​ரணை​யில், அமுதா கொலை செய்​யப்​பட்​டிருக்​கலாம் என்று கிராம மக்​கள் சந்​தேகம் எழுப்​பிய​தாகத் தெரி​கிறது. அமு​தா​வின் உடலில் காயங்​கள் இருந்​ததும் இதை ஊர்ஜிதப்படுத்தி​யது.

பிரேத பரிசோதனை அறிக்​கை​யில், அமுதா விஷம் கொடுத்​தும், கழுத்தை இறுக்​கி​யும் கொலை செய்​யப்​பட்​டது உறு​தி​யானது. இதையடுத்​து, சிவன், வைரம்​மாள் ஆகியோரை போலீ​ஸார் பிடித்து விசா​ரித்​தனர். விசா​ரணை​யில் மகளை அவர்​கள் கொலை செய்து விட்​டு, தற்​கொலை செய்​த​தாக நாடக​மாடியது தெரிய​வந்​தது. இதையடுத்து அவர்களை போலீ​ஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT