சரவண பெரு​மாள், சுந்​தர்.

 
க்ரைம்

செங்கல் சூளைக்கு மண் எடுக்க அனுமதிக்க ரூ.50,000 லஞ்சம்: பரமக்குடி கோட்டாட்சியர், வாகன ஓட்டுநர் கைது

செய்திப்பிரிவு

மதுரை: செங்​கல் சூளைக்கு மண் எடுத்து செல்ல அனு​ம​திக்க ரூ.50 ஆயிரம் லஞ்​சம் வாங்​கியதாக பரமக்​குடி வரு​வாய் கோட்​டாட்​சி​யரை லஞ்ச ஒழிப்​புப் பிரிவு போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர். உடன் அவரது வாகன ஓட்​டுநரும் கைது செய்​யப்​பட்​டார்.

ராம​நாத​புரம் மாவட்​டம், பரமக்​குடி வரு​வாய் கோட்​டாட்​சி​ய​ர் (ஆர்​டிஓ) சரவண பெரு​மாள். ராம​நாத​புரம் மாவட்​டம் முதுகுளத்​தூரைச் சேர்ந்த ஒரு​வர், மானாமதுரை​யில் செயல்​பட்​டு​வரும் செங்​கல் சூளைக்கு மண் எடுத்​துச் செல்ல சரவண பெரு​மாளிடம் அனு​மதி கேட்​டுள்​ளார். அதற்கு அவர் ரூ.50 ஆயிரம் லஞ்​சம் கேட்​டுள்​ளார். அந்த நபர், ராம​நாத​புரம் லஞ்ச ஒழிப்​புப் பிரிவு போலீ​ஸில் புகார் அளித்​தார்.

லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீ​ஸார் அறி​வுரை​யின்​படி, நேற்று மதி​யம் பரமக்​குடி ஓட்​டப்​பாலத்​தில் உள்ள வரு​வாய் கோட்​டாட்​சி​யர் முகாம் அலு​வல​கத்​தில் வைத்து ரூ.50 ஆயிரத்தை லஞ்​ச​மாக வழங்​கி​யுள்​ளார். அப்போது லஞ்ச ஒழிப்​புப் பிரிவு டிஎஸ்பி ராமச்​சந்​திரன் தலை​மையி​லான போலீ​ஸார், சரவண பெரு​மாளைகைது செய்​தனர். அவருக்கு உடந்​தை​யாக இருந்த அவரது வாகன ஓட்​டுநர் சுந்​தரையும் கைது செய்​தனர்.

இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்​பு போலீ​ஸார், வரு​வாய் கோட்​டாட்​சி​யரின் முகாம் அலு​வல​கத்​தில் சோதனை மேற்​கொண்​டனர். இதில், கணக்​கில் வராத பணம் ரூ.5.52 லட்​சத்தை கைப்​பற்​றிய​தாக கூறப்​படு​கிறது. இந்த சோதனை நிறைவு​பெறும்​பட்​சத்​தில் மட்​டுமே, இந்த சம்​பவத்​தில் உள்ள முழு​மை​யான விவரங்​கள் தெரிய​வரும். மதுரை​யில் உள்ள கோட்​டாட்​சி​யர் வீடு, பரமக்​குடி அருகே உள்ள ஓட்​டுநரின் வீடு ஆகிய​வற்​றி​லும் சோதனை நடந்தது.

SCROLL FOR NEXT