க்ரைம்

குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்திய முறுக்கு உற்பத்தி நிறுவன உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை

திருவொற்றியூர் நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

பொன்னேரி: சென்​னை, எண்​ணூர் பகு​தி​யில் உள்ள நெய் முறுக்கு உற்​பத்தி நிறு​வனம் ஒன்​று, குழந்தைத் தொழிலா​ளர்​களை பணி​யில் அமர்த்தி வேலை செய்ய வைத்​துள்​ளது.

இது தொடர்​பாக திரு​வொற்​றியூர் வட்​டாட்​சி​யர் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி எண்​ணூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

அப்​பு​காரின் அடிப்​படை​யில் எண்​ணூர் போலீ​ஸார், முறுக்கு உற்​பத்தி நிறுவன உரிமை​யாள​ரான போத்​தி​ராஜா (52) மீது வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

தொடர்ந்து போத்​தி​ராஜாவை கைது செய்து நீதி​மன்​றக் காவலுக்கு உட்​படுத்​தினர். இந்த வழக்கு விசா​ரணை திரு​வொற்​றியூர் குற்​ற​வியல் நீதித்​துறை நடு​வர் நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது.

முடிவுக்கு வந்த வழக்கு விசா​ரணை​யில், போத்​தி​ராஜா மீதான குற்​றங்​கள் நிரூபிக்​கப்​பட்​டன. ஆகவே இவ்​வழக்​கின் தீர்ப்பை திரு​வொற்​றியூர் குற்​ற​வியல் நீதித்​துறை நடு​வர் கார்த்​திக் நேற்று முன்​தினம் அறி​வித்​தார்.

அத்​தீர்ப்​பில், போத்​தி​ராஜாவுக்கு இந்​திய தண்​டனைச் சட்​டப் பிரிவு 341, 374 ஆகிய​வற்​றின் கீழ் 1.1 ஆண்டு சிறைத் தண்​டனை, ரூ.4 ஆயிரம் அபராதம், கொத்​தடிமைத் தொழிலா​ளர் முறை (ஒழிப்​பு) சட்​டம் 1976 பிரிவு 16, 17, 18 ஆகிய​வற்​றின் கீழ் தலா 3 ஆண்​டு​கள் சிறைத் தண்​டனை மற்​றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்​துள்​ளார். மேலும் அவர் இத்​தண்​டனை​களை ஏக காலத்​தில் அனுபவிக்க வேண்​டும் எனவும் தன் தீர்ப்​பில்​ தெரி​வித்​துள்​ளார்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT