க்ரைம்

சென்னை | கம்ப்யூட்டர் வியாபாரியிடம் ஆடு வியாபார முதலீட்டு ஆசை காட்டி ரூ.87 லட்சம் மோசடி: மேலும் ஒருவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ஆடு வாங்கி விற்​கும் தொழிலில் முதலீடு செய்​தால் அதிக லாபம் தரு​வ​தாக கூறி, கம்ப்​யூட்​டர் வியா​பாரி​யிடம் ரூ.87 லட்​சம் மோசடி செய்த வழக்​கில், தலைமறை​வாக இருந்த மேலும் ஒரு​வர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

சென்​னை, மாதவரம், கில்​பர்ன் நகரில் வசித்து வருபவர் ஜெகன் (44). அண்​ணா​சாலை​யில் உள்ள ஸ்பென்​சர் பிளாசா வணிக வளாகத்​தில் கணினி பழுது மற்​றும் விற்​பனை செய்​யும் கடை நடத்தி வரு​கிறார்.

          

இவருக்கு 2020-ம் ஆண்டு திரு​முல்​லை​வாயலைச் சேர்ந்த பால்​ராஜூ (37), அவரது மனைவி தீபா (36), திரு.​வி.க. நகரைச் சேர்ந்த இளவழகி (39) உட்பட 5 பேரின் அறி​முகம் கிடைத்​தது.

இவர்​கள் ஜெகன் வீட்​டுக்கு வந்து ஆடு வாங்கி விற்​கும் தொழிலில் முதலீடு செய்​தால் அதிக லாபம் கிடைக்​கும் என ஆசை வார்த்தை கூறினர். இதை உண்மை என நம்​பிய ஜெகன், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.10 லட்​சம் கொடுத்​தார்.

அடுத்த மாதமே ஆடு விற்​பனை செய்​த​தில் உங்​களுக்கு சேர வேண்​டிய லாபம் என்று கூறி ரூ.80 ஆயிரத்தை கொடுத்​தனர். மேலும் பங்​கு​தா​ர​ராக சேர்ந்​தால் கிடைக்​கும் லாபத்​தில் 50 சதவீதம் தரு​வ​தாக​வும், ராஜஸ்​தானில் இருந்து ஆடு வாங்கிக் கொண்டு வரு​வதற்கு சரக்கு வாக​னம் வாங்க வேண்​டும் என்​றும் கூறினர்.

இதையடுத்​து, ஜெகன் பல்​வேறு தவணை​களாக ரூ.87 லட்​சம் கொடுத்​துள்​ளார். ஆனால், அவருக்கு லாபப் பணம் கொடுக்​கப்​பட​வில்​லை. அத்​துடன், கொடுத்த பணத்​தை​யும் திருப்பி தரவில்​லை.

ஏமாற்​றப்​பட்​டதை உணர்ந்த ஜெகன் இந்த விவ​காரம் தொடர்​பாக மாதவரம் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில், பண மோசடி நடை​பெற்​றது உறுதி செய்​யப்​பட்​டது.

இதையடுத்​து, குற்​றச்​சாட்​டுக்கு உள்​ளான பால்​ராஜு, அவரது மனைவி தீபா, இளவழகி ஆகிய 3 பேரை கடந்த 9-ம் தேதி கைது செய்​தனர். இவ்​வழக்​கில் தலைமறை​வாக இருந்த வியாசர்​பாடி திரு.​வி.க. தெருவை சேர்ந்த சக்​திவேல் (51) என்​பவரை நேற்​று​முன்​தினம் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். இந்த வழக்​கில் தொடர்​புடைய மேலும்​ ஒரு​வரை போலீ​ஸார்​ தொடர்ந்​து தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT