க்ரைம்

சிவகங்கை | சிறுமிக்கு பாலியல் கொடுமை முதியவருக்கு 61 ஆண்டு சிறை

செய்திப்பிரிவு

சிவகங்கை: சிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்த முதி​ய​வருக்கு 61 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து சிவகங்கை நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​தது.

சிவகங்கை மாவட்​டம் மானாமதுரை அருகே பட்​டத்​தரசிகிராமத்​தைச் சேர்ந்த தொழிலாளி ராஜூ (68). இவர் 2021-ம் ஆண்டு 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்​கொடுமை செய்​தார். இதில் அந்தச் சிறுமி கர்ப்​ப​மாக இருப்​பது தெரிய​வந்​தது.

          

குழந்​தைகள் நலக் குழு​ நடத்​திய விசா​ரனை​யில், ராஜூ பாலியல் வன்​கொடுமை செய்​த​து தெரியவந்தது. இதுகுறித்து மானாமதுரை அனைத்து மகளிர் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து ராஜூவை கைது செய்​தனர்.

இந்த வழக்கு விசா​ரணை சிவகங்கை போக்சோ நீதி​மன்​றத்​தில் நடந்தது. இதில் ராஜூவுக்​கு 3 குற்றப் பிரிவுகளின் கீழ் மொத்​தம் 61 ஆண்​டு​கள் சிறை தண்​டனை​யும், ரூ.4 ஆயிரம் அபராத​மும் விதித்து நீதிபதி கோகுல்​முரு​கன் தீர்ப்​பளித்​தார். மேலும், பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்​சம் இழப்​பீடு வழங்​க​வும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்​தர​விட்​டார்.

SCROLL FOR NEXT