க்ரைம்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரபல திருடன் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலை​யத்​தில், பிரபல திருடனை ஆர்​.பி.எஃப் குற்​றப்​புல​னாய்வு பிரிவு போலீ​ஸார் கைது செய்​தனர்.

சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​தில் ஆர்​பிஎஃப் குற்ற புல​னாய்​வுப் பிரிவு ஆய்​வாளர் பி.நவீன் குமார் தலை​மை​யில் போலீ​ஸார் கண்​காணிப்​பில் ஈடு​பட்​டிருந்​தனர்.

அப்​போது, சந்​தேகத்​துக்​கிட​மான முறை​யில் ஒரு​வர் சுற்​றித்​திரிந்து கொண்​டிருந்​தார். அவரை பிடித்து விசா​ரித்​த​போது, கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தைச் சேர்ந்த விஜயகு​மார் (50) என்​பதும், பிரபல கொள்​ளை​யன் என்​பது தெரிய​வந்​தது.

தொடர்ந்​து, அவரிடம் நடத்​திய விசா​ரணை​யில், அவர் ஜூலை 28-ம் தேதி திருப்​பத்​தூரில் உள்ள ஒரு செல்போன் கடையின் பூட்டை உடைத்​து, ரூ.15 ஆயிரம் ரொக்​கம் மற்​றும் ஒரு கைபேசியை திருடியதை ஒப்​புக்​கொண்​டார்.

இதையடுத்​து, விஜயகு​மாரை கைது செய்து திருப்​பத்​தூர் நகர போலீ​ஸாரிடம் ஒப்​படைத்​தனர்.

மேலும், அவர் மீது கன்​னி​யாகுமரி மாவட்​டம் கோட்​டார், ஈரோடு, தூத்​துக்​குடி மற்​றும் போத்​தனூர் காவல் நிலை​யங்​களில் திருட்டு வழக்​கு​கள் நிலு​வை​யில் இருப்​பது உறு​தி செய்​யப்​பட்​டது.

SCROLL FOR NEXT