ஆலம்பூண்டி அருகே வனப் பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் ஒரு மாதத்துக்கு முன் மாயமான சிறுமியை சிபிசிஐடி போலீஸார் நேற்று தேடினர்.

 
க்ரைம்

செஞ்சியில் காணாமல் போன சிறுமியை வனப்பகுதியில் தேடியும் பலன் இல்லை

செய்திப்பிரிவு

விழுப்புரம்: செஞ்​சி​யில் காணா​மல் போன சிறுமியை வனப் பகுதி​களில் மோப்ப நாய் உதவியுடன் சிபி​சிஐடி போலீ​ஸார் தேடியும் எந்​தத் தடயமும் சிக்​க​வில்லை.

விழுப்​புரம் மாவட்​டம் செஞ்​சியை அடுத்த ஆலம்​பூண்டி ஊராட்சி நடுப்​பட்டு கிராமத்​தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, காணாமல் போன வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். டிஐஜி விக்​ரமன், எஸ்பி ஜவகர் உள்​ளிட்​டோர் கடந்த 23 நாட்​களாக விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இவர்​களுக்கு உதவியாக விழுப்​புரம் மாவட்ட சைபர் பிரிவு போலீ​ஸாரும் செயல்​படு​கின்​றனர்.

செல்​போன் டவரில் பதிவான எண்​கள், கண்​காணிப்பு கேம​ராவில் பதிவான காட்​சிகள் மற்​றும் சந்​தேக நபர்​கள், சரித்​திரப் பதிவேடு குற்​றவாளி​கள், சிறுமி​யின் பெற்​றோர், உறவினர் என நூற்​றுக்​கணக்​கான நபர்​களிடம் சிபி​சிஐடி போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி​யும் எந்த துப்​பும் கிடைக்​க​வில்லை.

இந்​நிலை​யில், ஆலம்​பூண்டி மற்​றும் அருகே உள்ள வனப் பகுதி​யில் வனத்​துறை​யினருடன் இணைந்து சிபி​சிஐடி போலீ​ஸார் நேற்று தேடுதல் பணி​யில் ஈடு​பட்​டனர். 2 போலீஸ் மோப்ப நாய்​களும் அழைத்​துச் செல்​லப்​பட்​டன.

சிறு​வாடி காப்​புக்​காடு உட்​பட வனப் பகுதி​யில் உள்ள புதர்​கள் மற்​றும் பாறைகளுக்கு இடையே உள்ள பகுதி​களி​லும் சோதனை நடத்​தப்​பட்​டது. இருப்​பினும், சிறுமி​யின் நிலை குறித்து எந்த தடயமும் கிடைக்​க​வில்லை. சிறுமி மாய​மாகி 33 நாட்​கள் கடந்த பிறகும், விடை கிடைக்​காததால் சிபி​சிஐடி போலீ​ஸாரும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT