க்ரைம்

காருக்குள் சிறுமி வன்கொடுமை ஜெம் வீரமணி மீது புதிய புகார்

செய்திப்பிரிவு

சென்னை: சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்​த​தாக, ஜெம் கிரானைட் நிறுவன உரிமை​யாளர் வீரமணி கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார்.

அவருக்கு உடந்​தை​யாக இருந்​த​தாக சாந்​தி, அவரது கணவர் மகேந்​திர சிம்​மன் மற்​றும் மற்​றொரு உதவி​யாளர் கணேசன் ஆகியோ​ரும் அடுத்​தடுத்து கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்த வழக்கை விசா​ரிக்க சென்னை மத்​தி​யக் குற்​றப்​பிரிவு கூடு​தல் காவல் ஆணை​யர் தேன்​மொழி தலை​மை​யில் சிறப்​புப் புல​னாய்​வுக் குழு அமைக்​கப்​பட்​டது.

வீரமணி​யால் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் செல்​போன் எண், வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்​கலாம் என தொலைபேசி எண் அறிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்து வீரமணி​யால் பாதிக்​கப்​பட்ட சிறுமிகள், அவர்​களது பெற்​றோர்​கள் அடுத்​தடுத்து புகார் தெரி​வித்து வரு​கின்​றனர்.

அந்த வகை​யில் சிறுமி ஒரு​வர் பரபரப்பு புகார் ஒன்றை தெரி​வித்​துள்​ளார்.

அதில் கல்விக்கு உதவுவ​தாகக் கூறி ஒருமுறை அழைத்து செல்​லும்போது காருக்​குள்​ளேயே வைத்து தன்னை பாலியல் வன்​கொடுமை செய்​தார் என்று தெரி​வித்​துள்​ளார். இதையடுத்து அந்த சிறுமி​யிடம் சிறப்​புக் குழு​வினர் விசா​ரிக்க உள்​ளனர்.

SCROLL FOR NEXT